அணைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
தானே புயல் தமிழகத்தை புரட்டி போட்ட நிலையில் பிறக்கிறது புத்தாண்டு 2012. தானே புயல் உயிர்களுக்கும், உடமைகளுக்கும் ஏன் கழகப்பேருந்துகளுக்கும் சேதங்களை ஏற்படுத்தி சென்றுவிட்டது.
இது ஒருபுறம் இருக்க இந்த புத்தாண்டிலாவது கழக தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய விடுப்பு ஒப்படைப்பு சம்பளம்,D.A நிலுவை தொகைகளை உடனே கொடுக்குமா?.மேலும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய அனைத்து பணபலன்களையும் ஓய்வு பெறும் நாளன்றே தொழிலாளிக்கு வழங்க முன்வருமா?
சென்ற 2010 ஊதிய ஒப்பந்தத்தில் முற்று பெறாத குழு அமைத்து முடிவு என்ற பணி நேரம்,விருப்ப ஓய்வு,கி.மீ. இயக்கம் இவற்றை தமிழக அரசு சீர்செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர். முக்கியமாக பென்சன் அனைவருக்கும் கிடைப்பதை அரசு உத்தரவாதபடுத்த வேண்டும்
No comments:
Post a Comment