Friday, 4 May 2012

ஓட்டுனர்களுக்கு பயிற்ச்சி


பயிற்ச்சி மட்டுமே விபத்தை தடுக்குமா?

கும்மிடிபூண்டி ஓட்டுனர் பயிற்ச்சி மையம் ரூ 15 கோடி செலவில் சர்வதேச தரத்திற்க்கு உயர்த்தப்படும்,தமிழக முதல்வர் அறிவிப்பு. சிறந்த ஓட்டுனர்களை உருவாக்கி விபத்துக்களை தவிர்ப்போம்.அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் வரவேற்ற அறிவிப்பு. ஓட்டுனர்களால் மட்டுமே விபத்தை தடுத்துவிட முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது.சாலையை உபயோகிக்கும் அனத்து தரப்பினரும் பொறுமையுடன் சாலை விதிகளை கடைபிடித்தாலன்றி விபத்துகளை தவிர்க்க முடியாது. அரசுக்கு வருவாயை அள்ளித்தரும் குடிமகன்களால் ஏற்படும் விபத்துக்கள் மிக அதிகம்.
சாலையை உபயோகிக்கும் ஒவ்வொருவரும் சாலையை உபயோகிக்கும் நான் மற்றவர்களுக்கு தடையாக ஒருபோதும் இருக்க மாட்டேன் என உறுதி ஏற்று நடந்தால் 90 சத விபத்துக்கள் நிகழாது.
கிளைச்சாலையிலிருந்து முதன்மை சாலைக்கு (Main road)  செல்லும் போது நின்று கவனித்து செல்பவர்கள் மிகவும் சொற்பம்.Lane Disipline கடைபிடிக்காமல் Zigzag ஆக ஒட்டுபவர்கள் ஏராளம்.வலதுபுறம் இருந்து வரும் வாகனத்திற்க்கு முதலில் வழி விடுகிறோமா நாம்?.வாகனம் ஓட்டும்போது அலைபேசியில் பேசாதவர்கள் எத்தனை பேர்?.
விபத்தின் தன்மையை ஆராயமல் கனரக (பெரிய) வாகன ஒட்டியை மட்டும் விபத்திற்க்கு பொறுப்பாக்கும் நடைமுறையை காவல்துறையும் அரசும் பின்பற்றுவதே பல்வேறு விபத்துக்களுக்கு வழிவிடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
சிறந்த நல்ல பயிற்ச்சி பெற்ற கனரக ஓட்டுனர்களை உருவாக்குவதனால் மட்டும் விபத்து தடுக்கப்படும் என்பது பகல்கனவே ஆகும்.
ஒரு பங்கு சாலை வரிவாக்கம் செய்யப்படுவதற்க்குள் நூறு பங்கு வாகனம் பெருகுகிறது. பொது போக்குவரத்து கட்டமைப்பை மேன்படுத்தி வாகன பெருக்கத்தை கட்டுக்குள் வைக்காதவரை விபத்துக்களை தடுப்பது என்பது கானல் நீரே.

No comments:

Post a Comment