Sunday, 20 January 2013

அரசுப்போக்குவரத்து


* வஞ்சிக்கப்படும் ‘ரிசர்வ்’ தொழிலாளர்கள் * தலைவிரித்தாடும் லஞ்ச லாவண்யம் * சீரழிக்கப்படும் அரசுப்போக்குவரத்து
கோரிக்கைகள் தீரும்வரை உண்ணாவிரதம்

ஜன.23 அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் மாபெரும் போராட்டம் துவங்குகிறது
சென்னை, ஜன. 20-அரசுப் போக்குவரத்துத் தொழி லாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றும் வரை, ஜனவரி 23ம்தேதிமுதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடை பெறும் என தமிழ்நாடு அரசுப் போக் குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) அறிவித்துள்ளது.இதுதொடர்பாக சம்மேளனத் தின் பொதுச் செயலாளர் ஏ.பி.அன் பழகன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:16.5.2011 அன்று அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டு கழித்து புதிய பேருந்துகள் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கியது. 9.5.2012 அன்று தமிழக சட்டமன்றத்தில் விதி எண் 110ன் கீழ் தமிழக முதல்வரால் போக்குவரத்துக் கழகங்கள் சம்பந்தமாக சில அறிவிப்புகள்
வெளியிடப்பட்டன. இவ்வறிவிப் பின்படி 1000, 500 நாட்கள் பணி புரிந்த ரிசர்வ் தொழிலாளர்கள் ரிசர்வ் தொழிலாளர்கள் 9169 பேர் நிரந்தரப் பணியிடத்தில் நியமிப்ப தாக அறிவிக்கப்பட்டன. 300 கிலோ மீட்டருக்கு மேல் ஓடக்கூடிய பேருந்துகள் அனைத்தும் விரைவு கழகம் மூலம் இயக்கப்படும் எனவும் விரைவு கழகம் விரிவாக்கம் செய்யப் பட்டு பல பணிமனைகள் கூடுத லாகத் திறக்கவும் அவ்வறிப்பில் தெரிவிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பல ஆண்டு களாக வழங்கப்பட வேண்டிய பணப்பலன்கள் வழங்கப்படுவ தாகவும் அறிவிக்கப்பட்டது.தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) சார்பில் இவ்வறிவிப்புகளை வர வேற்றோம். நீண்ட நாள் ரிசர்வ் என்ற பெயரில் பணியாற்றிய தொழி லாளர்கள் இப்போதாவது நமக்கு விடிவுகாலம் கிடைக்குமென்று மனம் மகிழ்ந்தார்கள். பரவசம டைந்து தமிழக முதல்வரை வாழ்த் தினர். கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற கொடுமைகளுக்கு இந்த ஆட்சியில் தீர்வு வரும் என எதிர்பார்த்தார்கள்.ஆனால் முதல்வரின் அறிவிப் பின்படி ரிசர்வ் தொழிலாளர்களுக்கு பணிநிரந்தர உத்தரவு வழங்கப்பட வில்லை. பணிஎண், தினக்கூலி உத்தரவு தான் வழங்கப்படும் என கழக நிர்வாகங்களால் அறிவிக்கப் பட்டது. அந்த உத்தரவு பெற வேண் டுமானால் ரூ.10,000 கொடுக்க வேண்டுமென தொழிலாளர்கள் கசக்கி பிழியப்பட்டனர். ஆங் காங்கே ஏஜெண்டுகள் உருவானார் கள். அதிகாரிகள் பலர் ஏஜெண்டாக மாறினார்கள்.
வேலூர் கழகத்தில் தினக்கூலி உத்தரவு பெற ரூ.12,000 வசூலித்தது காரணமாக 3 அதிகாரி களை லஞ்ச ஒழிப்புத்துறை கை யும் களவுமாக பிடித்து கைது செய்த தோடு, நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.பின்னர் ஆளும் கட்சி தொழிற் சங்கத்தை சார்ந்த ஏஜெண்டுகள் வசூல் செய்வதற்கு வழி வகுக்கப் பட்டது. இதுகுறித்து சம்மேளனத் தின் (சிஐடியு) சார்பில் நீதிமன்றத் தில் வழக்கு தொடுக்கப்பட்டு, சீனி யாரிட்டி அடிப்படையில்தான் ரிசர்வ் தொழிலாளர்களுக்கு உத்தரவு வழங்க வேண்டுமென நீதிமன்றத் தில் உத்தரவும் தரப்பட்டது.முதலமைச்சர் அறிவித்தும் நீதி மன்றம் உத்தரவிட்டும் ரூ.10,000 கொடுப்பவர்களுக்கு மட்டுமே தினக்கூலி உத்தரவு வழங்கப்படு கிற நிலைதான் இன்று வரை தொடர்கிறது. இது எந்தவிதத்திலும் நியாயமல்ல. பணம் கொடுக்க மறுக் கும் நூற்றுக்கணக்கான ரிசர்வ் தொழிலாளர்களுக்கு உத்தரவு வழங் கப்படாத நிலை இன்றும் தொடர் கிறது.300 கி.மீ. மேல் மற்றக்கழகங் களில் ஒட்டப்பட்ட பல வழித்தடங் கள் விரைவுகழகத்திற்கு எடுக்கப் பட்டு இயக்கப்படுகிறது. ஆனால் முதல்வரின் அறிவிப்பின்படி இது வரை கூடுதலாக எந்த பணிமனை யும் உருவாக்கப்படவில்லை. சுமார் 800 தொழிலாளர்கள் வரை புதிதாக ரிசர்வ் என்ற பெயரில் பணிக்கு எடுக்கப்பட்டுள்ளனர். இதிலும் லஞ்ச லாவண்யம் கடந்த ஆட்சி யைவிட மிஞ்சிவிட்டது. ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலி தொழி லாளர்களுக்கு ரூ.457 ஓட்டுநருக் கும், ரூ.450 நடத்துநருக்கும் சம் பளம் வழங்கப்பட வேண்டும். ஆனால் ரூ.230, ரூ.229 மட்டுமே தினக்கூலி சம்பளமாக வழங்கப் படுகிறது. கழகங்களில் குறைந்த கூலி கொடுத்து தொழிலாளர்களை சுரண்டும் நிலையே நீடிக்கிறது.ஓட்டுநர் பயிற்சி ஆசிரியர், டிக்கெட் பரிசோதகர் மற்றும் பாது காவலர் பிரிவு கண்காணிப்பாளர் ஆகியோருக்கு கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட ஊதிய ஒப்பந்தத் தில் அடிப்படை சம்பளமும் தர ஊதியமும் நிர்ணயிக்கப்பட வில்லை. இதனால் பதவி உயர்வு பெற்ற நூற் றுக்கணக்கான தொழிலாளர் களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு கிடைக்காத நிலை யிலேயே பணி ஓய்வும் பெற்றுவிட் டனர். சம்மேளனத்தின் சார்பாக பல முறை வலியுறுத்தியும், அரசால் தீர்வு காணாத நிலையே தொடர் கிறது.போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் நடத்தப்பட்ட உணவகங் கள் தனியார்மயம் ஆக்கப்பட்டது. ஆளுங்கட்சியை சார்ந்தவர்களுக்கு இவ்வுணவகங்கள் குத்தகைக்கு விடப்பட்டன. உணவின் தரம் மிக மோசமான நிலையிலேயே உள் ளது. உணவகத்தைத் தொழிலாளர் கள் வெறுக்கும் நிலை ஏற்படுத்தப் பட்டது. லஞ்ச லாவண்யங்கள் இங்கும் தலைவிரித்தாடுகின்றன.அனைத்துக் கழகங்களிலும் பணிபுரியும் தொழிலாளர்கள் அவர் கள் விரும்பும் கழகத்தில் பணிபுரி யலாமென அறிவிக்கப்பட்டு, தொழி லாளர்களின் விருப்ப அடிப்படை யில் இடமாற்றம் கோரும் மனுவும் பெறப்பட்டது. ஆனால் இதையும் அமல்படுத்தாத நிலை உள்ளது. இதிலும் ‘லஞ்ச லாவண்யம்’ துவங்கி வருகிறது. பேருந்து பரா மரிப்பிற்கு போதுமானதொழில்நுட்ப தொழிலாளர்கள் இல்லை. இதே போல் அலுவலக பணியாளர்களும் தேவைக்கேற்ப இல்லை.
இத் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர் களின் வேலைப்பளு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ஓட்டுநர்களுக்கு ‘கேஎம்பிஎல்’ உயர்வு கேட்டு நெருக்கடி கொடுப் பது, நடத்துநர்களுக்கு கலெக்சன் உயர்வு கேட்டு நிர்ப்பந்திப்பது தொடர்கிறது. குற்றச்சாட்டுக்கள் வழங்கி தண்டனைகள் வழங்கு வதும் கூடியுள்ளது. தண்டனை களை குறைக்க கழக மட்டங்களில் ஏஜெண்டுகள் உருவாக்கப்பட்டு வருகிறார்கள். சுழற்சி முறையில் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு பணி வழங்கப்படுமென்ற ஒப்பந்த சரத்து அமலாகாமல் ஏட்டளவில் உள்ளது.மாநகர போக்குவரத்துக் கழகத் தில் நடைமுறைக்கு ஒத்துவராத வகையில் ஓட்டுநர், நடத்துநர்கள் பணி செய்யும் முறையில் மாற்றம் கொண்டு வர நிர்வாகம் துடிக்கிறது. சம்பளத்தைத்தவிர இதர சட்டப் பூர்வமான பணப்பலன்கள் தொழி லாளர்களுக்கு வழங்காத நிலையே தொடர்கிறது. வருங்கால வைப்பு நிதியில் திருமணம் மற்றும் கல்விக் கான கடன்கள் கூட பெற முடிய வில்லை. ஏஜெண்டுகளை அணுக வேண்டிய நிலையே கழகங்களில் உள்ளது.ஓட்டுநர், நடத்துநர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யும் கட்டுப்பாட் டுப் பிரிவும் அனைத்துக் கழகங் களிலும் ஆளுங்கட்சிக்கு குத்த கைக்கு விடப்பட்டுள்ள நிலை, கடந்த ஆட்சியைவிட கூடியுள்ளது என்றால் மிகையாகாது. விடுப்பு மறுப்பு என்பது எழுதப்படாத சட்ட மாக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் விடுப்பிற்கு கூட ஆளுங்கட்சி சங் கத்தை அணுக வேண்டிய நிலை உருவாக்கப்படுகிறது.போக்குவரத்து ஊழியர்கள் கடந்த காலத்தில் மூன்று மாதத் திற்கு ஒருமுறை பஞ்சப்படி உயர்வு பெறும் நிலை இருந்தது. கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட வஞ்ச னையான ஒப்பந்தத்தில் இம்முறை மாற்றம் செய்யப்பட்டு, ஆறு மாதத் திற்கு ஒரு முறை பஞ்சப்படி உயர் வை பெறும் நிலை உருவாக்கப் பட்டது. அரசு ஊழியர் ஆசிரியர் மற்ற பொதுத்துறை ஊழியர்கள் பெற்ற பின்னர் கடைசியாக போராடி, போக்குவரத்து தொழிலாளர்கள் பெரும் அவலநிலை உருவாக்கப் பட்டது. பஞ்சப்படியான அரியர்ஸ் தொகை வழங்காத புதிய நிலை உருவாகியுள்ளது. புள்ளியியல் துறை அறிவித்தவுடன் யார் அனு மதியுமின்றி போக்குவரத்து ஊழியர் களுக்கு பஞ்சப்படி உயர்வு கிடைத் திட மாற்றம் தேவை.கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக தேர்தல் அறிக்கை யில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பிற அரசு சார்ந்த நிறுவன ஊழியர் களுக்கு நடைமுறையில் உள்ள பென்சன் திட்டமே அமலாக்கப் படும் என கூறப்பட்டுள்ளது. அதனை நடைமுறைப்படுத்திட வேண்டுமென சிஐடியு கேட்டுக் கொள்கிறது.போக்குவரத்துக் கழகங்களில் 1.4.2003க்குப் பிறகு பணிக்கு அமர்த் தப்பட்ட சுமார் 50 ஆயிரம் தொழி லாளர்கள் (ரிசர்வ்) போக்குவரத்தில் நடைமுறையில் உள்ள பென்சன் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. மத்திய அரசாங்கம் அறிவித்துள்ள பங்கு சந்தையில் விடுகின்ற பென் சன் திட்டம்தான் இவர்களுக்கு பொருந்தும் என்ற நிலை எடுத்தி ருப்பது சரியல்ல. 1.9.1998 முதல் அமலாக்கப்பட்ட ஊதிய ஒப்பந்த அடிப்படையில் இவர்களுக்கு தற் போது நடைமுறையில் உள்ள பென்சன் திட்டம்தான் பொருந்தும்.புதிதாக பணிக்கு அமர்த்தப் பட்ட இத்தொழிலாளர்கள் (ரிசர்வ்) நடைமுறையில் உள்ள பென்சன் திட்டத்திற்கு கொண்டு வரப்பட வில்லை என்றால், நடைமுறை பென்சன் திட்டம் 2018 பிறகு அமல் படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும் என்பது தான் யதார்த்தமான நிலை யாகும்.1.4.2003க்குப் பிறகு வந்த தொழி லாளர்களுக்கு பிஎப் என்பதும் இல்லை. பென்சன் எவ்வளவு தொகை கிடைக்கும் என்று சொல்லமுடியாத சூழ்நிலையும் தற்போது உள்ளது.
அதிமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியிருப் பது போல் போக்குவரத்து தொழி லாளர்களுக்கு புதிதாக பணிக்கு அமர்த்தப்பட்ட சுமார் 50,000 தொழி லாளர்களையும் இணைத்து நடை முறை பென்சன் திட்டத்தை அமல் படுத்த வேண்டுமென சிஐடியு அரசை வலியுறுத்துகிறது.உலகமயம், தனியார்மயம், தாரா ளமயம் என்ற கொள்கைகளை மத் திய-மாநில அரசுகள் கடைப்பிடிப் பதால் ‘பென்சன் திட்டத்தில்’ பெரும் பாதிப்பை ஏற்படுத்த அரசு கள் திட்டமிடுகின்றன. புதிய தொழி லாளர்கள் கழக பென்சன் திட்டத் தில் இணைக்கப்படாததால் சில ஆண்டுகளில் பென்சன் கிடைக் காத நிலை அரசின் கொள்கை களால் உருவாகும்.ஓய்வுபெற்ற தொழிலாளர்க ளுக்கு முறைப்படி கிடைக்க வேண்டி பஞ்சப்படி உயர்வுகூட காலத்தில் வழங்காமல் இழுத்தடித்து கொடு மைப்படுத்தப்படுகிறார்கள். மேலும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பல்வேறு வகையான பணப்பலன்கள் வழங் கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின் றன.ஓய்வு பெறும் நிலையில் சில தொழிலாளர்களிடம் தண்டனை களை காரணம் காட்டி அவர் களுக்கு வழங்கப்படுகிற பி.எப்., கிராஜூவிட்டி போன்ற தொகை யில் லட்சக்கணக்கான ரூபாய் பணப்பிடித்தம் செய்யும் புதிய கொடுமை இவ்வாட்சியில் உரு வாக்கப்பட்டுள்ளது. இக்கொடுமை யால் ஓய்வுபெறும் தொழிலாளர் மட்டுமல்லாது, அவர்களது குடும்ப மும் கடும் துன்பத்திற்கும், துயரத் திற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.போக்குவரத்துக் கழகங்களில் எப்போதும் இல்லாதஅளவிற்கு லஞ்சமும் ஊழலும் பெருகி தலை விரித்தாடுகிறது. இதற்கு அதிகாரி களும் துணை நிற்கிறார்கள். அனைத்து விஷயங்களுக்கும் ‘ரேட்’ நிர்ணயம் செய்யப்பட்டு வசூல் செய்யப்படு கிறது. பொதுத்துறை நிறுவனத்தில் இந்நிலை உருவாவதை எவ்விதத் திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.தமிழக முதல்வர் மேற்சொன்ன பிரச்சனைகளில் உடனடியாக தலையிட்டு தீர்வு காணக்கோரி, சென்னை பல்லவன் இல்லம் முன்பு அனைத்துக்கழக சிஐடியு நிர்வாகிகள் 2013 ஜனவரி 23 காலை 8 மணி முதல் கோரிக்கைகள் தீரும் வரை ‘உண்ணாவிரதம்’ சங்க பேத மின்றி அனைத்துப் பிரிவு தொழி லாளர்களும் ஆதரவு நல்க வேண் டுமென அன்புடன் சம்மேளனம் கேட்டுக்கொள்கிறது.
ஏ.பி.அன்பழகன்  21.1.2013 தீக்கதிர் நாளிதழ்

No comments:

Post a Comment