Thursday, 27 February 2014

வருவாய் இழப்பு

வருவாய் இழப்பு சேலம் கோட்ட சென்னை வழித்தடப்பேருந்துகளுக்கு

சேலம் மாவட்டத்தின் பல ஊர்களிலிருந்து சென்னைக்கு 50 க்கு மேற்பட்ட பேருந்துக்கள் இயக்கப்படுகின்றன. இவை அனைத்தும் மதுராந்தகம்  மற்றும் செங்கல்பட்டு நகர்களுக்குள் சென்று செல்ல சேலம் கோட்ட மேலான்இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.மற்ற கோட்டங்களிலிருந்து இயக்கப்படும் அனத்து சென்னை வழித்தடப்பேருந்துகளும் புறவழிச்சாலையில் இயக்கப்படுகின்றன.விழுப்புரம் நகரிலிருந்து சென்னைக்கு இயங்கும் பேருந்துகள் கூட புறவழிச்சாலையிலேயே இயக்கப்படுகின்றன.
நகருக்குள் சென்று செல்வதனால் பயணநேரம் 30 முதல் 50 நிமிடங்கள் அதிகமாகிறது.இதனால் காலை வேளைகளில் சென்னை,சென்னை புறநகர் பகுதிகளிலிருந்து அலுவலகத்திற்கோ வேலைக்கோ மருவத்தூர் திண்டிவனம்,விழுப்புரம் செல்லும் பயணிகள் சேலம் கோட்டப்பேருந்துக்களை புறக்கணிக்கின்றனர்.இதனால் ஒரு பேருந்துக்கு சுமார் 2000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை இழப்பு ஏற்படுகின்றது.மாதம் ஒன்றுக்கு முப்பது முதல் 45 லட்சம் இழப்பு ஏற்படுகிறது.
மேற்படி நகர்களுக்குள் செல்லும் என்ற அறிவிப்பு எதுவும் பேருந்துகளில் இல்லாத்தால் தெரியாமல் ஏறிய பயணிகள் ஓட்டுநர் நடத்துனர்களிடம் வாக்குவாத்ததில் ஈடுபடுதுடன் திட்டவும் செய்கின்றனர்.

தொழிலாளிகளுக்கு விடுப்பு ஒப்படைப்பு சம்பளம் அகவிலைப்படி நிலுவைத்தொகை போன்ற நிதி பாக்கிகளை கொடுக்க வக்கில்லாத நிர்வாகம் இது போன்ற இழப்புக்களை ஏற்படுத்தி தொழிலாளிகளை வஞ்சிக்கின்றனர்.

No comments:

Post a Comment