Showing posts with label போக்குவரத்து தொழிலாளி. Show all posts
Showing posts with label போக்குவரத்து தொழிலாளி. Show all posts

Saturday, 27 July 2013

போக்குவரத்து தொழிலாளர்களின் அவலநிலை



தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் சென்னை, விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, நெல்லை போக்குவரத்து கோட்டங்கள் உள்ளன. இந்த கோட்டங்களில் 20 ஆயிரத்து 500 பஸ்கள் உள்ளன. ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 300 தொழிலாளர்கள் உள்ளனர். போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மாநிலம் முழுவதும் 46 ஆயிரம் பேர் உள்ளனர்.

போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஓய்வு பெற்றால், ஓய்வு பெறும் நாளில் பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, விடுமுறை சம்பளம் போன்றவற்றிற்கான காசோலையை கையில் வழங்கி, மாலை, மாரியாதை செய்து வீட்டில் கொண்டு போய் விடுவது வழக்கம். அந்த காலம் மலையேறிவிட்டது. இப்போது ஓய்வு பெற்றால் சால்வை போட்டு கைகுலுக்குவதோடு சரி. கூடுதலாக அரை கிலோ இனிப்பு, அரை கிலோ காரம், 3 பாத்திரங்கள் (சம்பளம்) வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். அதிலும் விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு அந்த மரியாதையும் இல்லை. வெள்ளை பேப்பரில் ‘நீங்கள் ஓய்வு பெற்று விட்டீர்கள்‘ என்று எழுதி தருவதோடு சரி.
பணிக்கொடை, விடுமுறை சம்பளம், வருங்கால வைப்பு நிதி பற்றி எதுவும் தெரியாமலேயே தொழிலாளி வீட்டிற்கு போகிறார். ஓய்வுக்கு பிறகு நிம்மதியாக வீட்டில் குடும்பத்துடன் பொழுதை கழிக்க வேண்டிய அவருக்கு அதன் பிறகு தான் வேலையே ஆரம்பிக்கிறது. தனக்கு கிடைக்க வேண்டிய பணிக்கொடை, பென்சன், விடுமுறை சம்பளத்திற்கு போக்குவரத்து கழக அலுவலகத்திற்கு தினமும் படியேறுகிறார். தள்ளாத வயதில் நடையாய் நடந்து ஒவ்வொரு அதிகாரிகளாக சந்தித்து குமுறலை கொட்டுகின்றனர். இருப்பினும் அவர்களின் கோரிக்கை, கிணற்றில் போட்ட கல்லாகவே உள்ளது.

பணிக்கொடை பணம் (கிராஜூவிட்டி) ஓய்வு பெற்ற 30 நாட்களுக்குள் தொழிலாளிக்கு வழங்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. 2011 மே மாதம்

Saturday, 3 November 2012

தித்திக்கும் தீபாவளி


தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டிருக்கிறது.போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இப்பொழுது வரை போனஸ் அறிவிப்பு வரவில்லை.தவிர ஜூலை மாதம் உயர்ந்த 7% அகவிலைபடி இன்று வரை (இம்மாத சம்பளத்திலும்) கொடுக்கப்படவில்லை.
இந்து நாளிதழை இணையத்தில் தேடிய பொழுது கிடைத்த 2001ம் ஆண்டின் தீபாவளி நினைவுகள்.

COIMBATORE, NOV. 16. Even as the strike by Tamil Nadu State Transport Corporation employees entered the seventh day today, there was hardly any palpable impact anywhere in the western districts of Coimbatore, Erode and the Nilgiris.
With Deepavali crowds tapering off, even city services on certain routes in Coimbatore looked quite comfortable, while many continue to overload buses.
Apart from more than 80 per cent of the TNSTC buses, the entire fleet of private buses, mini-buses, omnibuses, taxicabs, vans, tempo-travellers, etc., were on the road. While 25 TNSTC workers were rounded up in the city, 40 others were taken into custody in other taluks.
In Erode district, more than 90 per cent of the TNSTC buses were on the road. Of the 315 persons rounded up today, 30 were women members of the workers' families. The women were later released. During the past one week, 904 have been remanded to custody in this district.
Meanwhile, in the wake of the Kovilpatty accident that claimed 28 lives, transport authorities in Erode district have instructed the newly-recruited crew not to drive vehicles at speeds beyond 50 kmph.
The private vehicles, which normally ceased their operation for at least a few hours in the night, are plying almost round-the- clock. However, the major grouse in Erode district is that the private operators are collecting excess fare. In the Nilgiris, 61 TNSTC workers were taken into custody today.

Wednesday, 8 August 2012

போக்குவரத்துக் கழகத்தில் பணம் கொடுத்தால்தான் பணி நிரந்தரம்


பணம் கொடுத்தால்தான் பணி நிரந்தரம்: கேலிக்கூத்தாகும் முதல்வரின் அறிவிப்பு!
சிஐடியு மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ கண்டனம்!
பணம் கொடுத்தால்தான் பணி நிரந்தரம் என்ற நிலையால் முதலமைச்சரின் அறிவிப்பு போக்குவரத்துக் கழகத்தில் கேலிக்கூத்தாக்கப்படுகிறது. இத்தகைய ஊழல் நடவடிக்கைகளுக்கு சிஐடியு மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- 1986ம் ஆண்டு ஒப்பந்தப்படி தமிழக அரசுக்கு சொந்தமான போக்குவரத்துக் கழகங்களில் பணிக்கு சேரும் தொழிலாளர்கள், ஓராண்டில் 240 நாட்கள் தொடர்ச்சியாக பணிபுரிந்தால் பணி நிரந்தரம்

Thursday, 19 April 2012

போக்குவரத்துத் தொழிலாளர் குமுறல்



தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்சனைகள் தீரும் என்ற எதிர்பார்ப்பு தொழிலாளர்களிடம் இருந்தது. அதற்கு நேர்மாறாக தமிழக அரசு மற்றும் கழகங்களின் செயல்பாடுகள்அமைந்துள்ளன.அண்ணா தொழிற்சங்க முன்னணி ஊழியர்களின் செயல்பாடுகளும் தொழிலாளர் நலனை சார்ந்திராமல்தங்கள் கட்சியின் ஆட்சியை பாதுகாக்கும் வகையிலேயே உள்ளது. திமுக ஆட்சியில் இதுவரை இல்லாத புதுமையாக ரிசர்வ் தொழிலாளர்களாக சுமார் 42,000 பேரை ஓட்டுநர்- நடத்துநர்களாக பணிநிய மனம் செய்து, குறைந்த கூலிகொடுத்து சுரண்டும் நிலையினை போக்குவரத்துக் கழகங்களில் அமலாக்கினர்.

அன்றைய அமைச்சர் கே.என்.நேருவிடம் பேச்சுவார்த்தையில் இது குறித்து

Friday, 6 April 2012

உயிருக்கு பாதுகாப்பில்லாத தொழில்


போக்கு வரத்து தொழிலாளியின் பரிதாப நிலை.

ஆத்தார் கிளையிலிருந்து ரூட் எண் 31 ஆத்தூர் டு கோவிந்தம்பாளையம் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இப்பேருந்து 04.04.2012 அன்று மாலை கோவிந்தம்பாளையத்திலிருந்து ஆத்தூர் செல்லும் பொழுது பேருந்தில் ஏறிய ஒரு பயணி பணியிலிருந்த நடத்துனர் முருகேசனிடம் தகராறு செய்து நடத்துனரை ஓடும் பேருந்திலிருந்து கீழே தள்ளிவிட்டார். கீழே விழுந்த

Saturday, 31 March 2012

PVT

போக்குவரத்து தொழிலாளி இப்பொழுது இணையத்தில் EBookஆக.
   
                                                                     
அரசுபோக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சார்பாக மாத இதழான போக்குவரத்து தொழிலாளி மின்புத்தகமாக இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சனவரி மாதPVTசொடுக்கி இறக்கம் செய்து கொள்ளலாம்.