போக்கு வரத்து தொழிலாளியின் பரிதாப நிலை.
ஆத்தார் கிளையிலிருந்து ரூட் எண் 31 ஆத்தூர் டு கோவிந்தம்பாளையம் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இப்பேருந்து 04.04.2012 அன்று மாலை கோவிந்தம்பாளையத்திலிருந்து ஆத்தூர் செல்லும் பொழுது பேருந்தில் ஏறிய ஒரு பயணி பணியிலிருந்த நடத்துனர் முருகேசனிடம் தகராறு செய்து நடத்துனரை ஓடும் பேருந்திலிருந்து கீழே தள்ளிவிட்டார். கீழே விழுந்த
நடத்துனருக்கு தோள்பட்டை மூட்டு நழுவியதுடன் முழங்கைக்கு மேல் பகுதியில் எலும்பு முறிவும் ஏற்பட்டுவிட்டது.
பணியிலிருக்கும் ஒரு அரசு ஊழியரை தாக்கும் தைரியம் எப்படி வந்த்து? அரசு மற்றும் கழக அதிகாரிகளின் அலட்ச்சிய போக்கும் பணியாளர்களை கேவலமாக நடத்தும் தன்மையும் மேற்படி நிகழ்விற்கு காரணமாகவும் தூண்டுகோலாகவும் அமைகிறது. நாம்தான் அலுவலகத்திற்குள் இருக்கிறோமே நமக்கென்ன எனும் அலட்ச்சிய போக்கில் அதிகாரிகள் உள்ளனர். மூன்று நாட்கள் வரையிலும் குற்றம் பதிவு செய்யப்படவில்லை.நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும் இல்லை.
எதிர்பாராதவிதமாக ஓரு ஓட்டுனர் உயிரிழப்பு விபத்து ஏற்படுத்திவிட்டால் தவறு ஒட்டுனர் மீது இல்லாத போதிலும் ஓட்டுனரை ஓடி ஒளிந்தாலும் தேடிபிடித்து அடித்து கொலை செய்யும் நிலையும் இன்று இருக்கிறது. திட்டமிட்டு கொலை செய்யும் கொலையாளியை கூட தன்டிக்க நீதிமன்றம்,வாதிடல்,தீர்ப்பு என்று வழிமுறைகள் உள்ளன.அப்படியே கொலையாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டாலும் குடியரசு தலைவரிடம் கருணை மனு கொடுத்து தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது.ஆனால் ஓட்டுனர் மீது தவறு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அடித்து கொல்லும் பரிதாப நிலை இன்று இருக்கிறது.
அண்மையில் கரூரில் மணல் லாரியில் சிக்கி ஒரு சிறுவன் உயிரிழந்தான். அந்த லாரி ஓட்டுனர் அடித்தே கொல்லப்பட்டார்.உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு இழப்பீடு கிடைத்து. ஆனால் ஓட்டுனர் உயிரிழப்புக்கு யாரமீதும் குற்ற வழக்கு இன்று வரை பதிவு செய்யபடவில்லை. அதனால் அவர் குடும்பத்திற்க்கு எவ்வித இழப்பீடும் கிடைக்கவில்லை .வன விலங்குகள் தாக்கி உயிரிழந்தால் கூட இன்று இழப்பீடு உண்டு. ஆனால் இது போன்ற சமூகவிரோத செயலால் உயிரிழப்போரின் குடும்பத்தினரின் கதி அதோகதிதான்.
சாலை விதிகளை மதிக்காமல் சென்று விபத்தில் சிக்குவோர் மீதும் குடி போதையில் தான்தோன்றி தனமாக சென்று விபத்தில் சிக்குவோர் மீதும் எவ்வித நடவடிக்கையும் தண்டனையும் இன்று இல்லை.இதே நிலை நீடிக்குமானால் ஓட்டுனர் வேலைக்கு எவரும் வரமாட்டார் என்பதே உண்மை. உயிருக்கு பாதுகாப்பில்லாத பணி செய்ய யார்தான் வரும்புவர்?
No comments:
Post a Comment