Friday, 31 August 2012
Wednesday, 22 August 2012
வங்கி ஊழியர்களின் போராட்டம் ஏன்?
வங்கி ஊழியர்களின் தேசபக்தப் போராட்டம்
மத்திய அரசின் மக்கள் விரோத சட்டத் திருத்தங்களை கண்டித்து நாடு முழுவதும் உள்ள 10 இலட்சம் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் ஆகஸ்ட் 22, 23 ஆகிய இரு நாட்களும் முழுமையான வேலை நிறுத்தத் தில் ஈடுபட உள்ளனர். இதற்கான அறை கூவலை பி.இ.எஃப்.ஐ. உள்ளிட்ட 9 சங்கங் களின் கூட்டமைப்பான யு.எஃப்.பி.யு. விடுத்துள்ளது. வங்கிகள் ஒழுங்கமைப்பு சட்டம், வங்கிகள் தேசியமயமாக்கல் சட்டம் மற்றும் போட்டிக் குழுமம் சட்டம் ஆகிய 3 சட்டங்களில் வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி திருத்தங்களை கொண்டுவருவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
Saturday, 18 August 2012
Sunday, 12 August 2012
அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டம்
போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனைகள்: அனைத்துத் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை!
சென்னை, ஆக.10-
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தொழிலாளர் பிரச்சனைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளன. அரசும், நிர்வாகமும் தலையிட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணாவிட்டால் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட் டங்கள் நடைபெறும் என அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசுப் போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) துணைத்தலைவர் எம்.சந்திரன் தலைமையில் 10ம் தேதி பல்லவன் சாலையில் (கலையரங்க வளாகத்தில்) அமைந்துள்ள சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுக ஆட்சி பொறுப்பேற்று சுமார் 15 மாதங்கள் ஆகியும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகள் குறித்து, தொழிற்சங்கங்கள் அரசிடம் தனித் தனியாக மனு கொடுத்து நேரில் சந்தித்துபேசியும் இதுநாள் வரை தொழிலாளர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளன. முதலமைச்சர் சட்ட மன்றத்தில் அறிவித்த அறிவிப்புகளைக்கூட அமலாக்குவதில் காலதாமதம் நீடிக்கிறது. ரிசர்வ்
Thursday, 9 August 2012
போக்குவரத்து கழகங்களில் நட்டமா?ஏன்?எப்படி?
பொதுப்போக்குவரத்தை ஒழித்துவிட்டு தனியார் முதலாளிகளை ஊக்குவிக்கும் அரசின் நடைமுறையால் மக்கள் இழப்பது என்ன?மறுமொழிகள்
தனியார்மயமும் தாராளமயமும் மக்களை நாட்டின் குறுக்கும் நெடுக்கும் வீசியெறிந்துக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் போக்குவரத்துக்கு பெருமளவு பேருந்தைத்தான் நாட வேண்டியிருக்கிறது.
கிட்டதட்ட மூன்று மாதங்களுக்கு முன்பாக முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே தொடர்வண்டியில் இடம் நிச்சயம். மேலும், வேண்டிய நேரத்தில் கிடைக்கின்றன, கொண்டு செல்கின்றன என்ற காரணங்களாலும் பேருந்துகளே மக்களுக்கு பெருமளவு கை கொடுக்கின்றன. இதில் அரசுப் பேருந்துகள் அதிகரிக்கப்படாமல் அதே எண்ணிக்கையிலிருந்தாலும் தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அரசுப்பேருந்துகள் தனியார் பேருந்துகளைவிட சொகுசாகவும், வசதியாகவும், முக்கியமாக சரியான நேரத்துக்குக் சென்றுவிடும்படியாகவும் இருக்கின்றன என்பதே பெருமளவு சொல்லப்படுகின்ற காரணங்களாக இருக்கின்றது. இதில் உண்மை இல்லாமல் இல்லை.
Wednesday, 8 August 2012
போக்குவரத்துக் கழகத்தில் பணம் கொடுத்தால்தான் பணி நிரந்தரம்
பணம் கொடுத்தால்தான் பணி நிரந்தரம்: கேலிக்கூத்தாகும் முதல்வரின் அறிவிப்பு!
சிஐடியு மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ கண்டனம்!
சிஐடியு மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ கண்டனம்!
பணம் கொடுத்தால்தான் பணி நிரந்தரம் என்ற நிலையால் முதலமைச்சரின் அறிவிப்பு போக்குவரத்துக் கழகத்தில் கேலிக்கூத்தாக்கப்படுகிறது. இத்தகைய ஊழல் நடவடிக்கைகளுக்கு சிஐடியு மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- 1986ம் ஆண்டு ஒப்பந்தப்படி தமிழக அரசுக்கு சொந்தமான போக்குவரத்துக் கழகங்களில் பணிக்கு சேரும் தொழிலாளர்கள், ஓராண்டில் 240 நாட்கள் தொடர்ச்சியாக பணிபுரிந்தால் பணி நிரந்தரம்
Wednesday, 1 August 2012
போக்குவரத்து தொழிலாளி மாத இதழ்கள்
போக்குவரத்து தொழிலாளி மாத இதழ்கள் சனவரி 2012லிருந்து ஏப்ரல் 2012 வரை இந்த இணைப்பிருந்து பதிவிறக்கம் செய்து படிக்கலாம்
இப்பொழுது
Subscribe to:
Posts (Atom)