வங்கி ஊழியர்களின் தேசபக்தப் போராட்டம்
மத்திய அரசின் மக்கள் விரோத சட்டத் திருத்தங்களை கண்டித்து நாடு முழுவதும் உள்ள 10 இலட்சம் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் ஆகஸ்ட் 22, 23 ஆகிய இரு நாட்களும் முழுமையான வேலை நிறுத்தத் தில் ஈடுபட உள்ளனர். இதற்கான அறை கூவலை பி.இ.எஃப்.ஐ. உள்ளிட்ட 9 சங்கங் களின் கூட்டமைப்பான யு.எஃப்.பி.யு. விடுத்துள்ளது. வங்கிகள் ஒழுங்கமைப்பு சட்டம், வங்கிகள் தேசியமயமாக்கல் சட்டம் மற்றும் போட்டிக் குழுமம் சட்டம் ஆகிய 3 சட்டங்களில் வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி திருத்தங்களை கொண்டுவருவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இந்த 3 சட்டத் திருத்தங்களுமே மக்கள் விரோதமானது; பெரும் முதலாளிகளுக்கு குறிப்பாக அந்நிய முதலாளிகளுக்கு சாதகமானது. எனவேதான், ஒட்டுமொத்த வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் இச்சட்டத் திருத்தங்களை எதிர்த்து பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு தனது பிடிவாதமான போக்கை கைவிடாததன் காரணமாக நாடு தழுவிய இரு நாட்கள் வேலை நிறுத்தம் என்பது அவசியமாகிறது.மக்களுக்கான கடன் மறுக்கப்படும் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு, சாதாரண மக்களுக்கும், ஏழை-எளிய மக்களுக்கும் கடன் வழங்குவதன் மூலமாக அவர்களின் வாழ்க்கைத்தரம் பெருமளவு முன் னேற்றத்தை பெற்றுள்ளது. ஆனால், தற்போது மீண்டும் வங்கிகள் தனியார்மயமாகுமானால் ஏழை-எளிய மக்களுக்கான கடன் என்பது அரிதாகிவிடும். பொதுத்துறையாக இருக்கும் போதே பல்வேறு காரணங்களைக் காட்டி கல்விக்கடன் மறுக்கப்படக்கூடிய சூழ்நிலை என்பது உள்ளது. பெண்கள் சுயஉதவிக் குழுக்களுக்கு நேரடியாக கடன் கொடுத்து வந்த பொதுத்துறை வங்கிகள் தற்போது நுண்கடன் நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் கொடுத்து, அதனை முன்னுரிமைக் கடனாக கணக்கெழுதிக் கொண்டிருக்கின்றன. அந்த நுண்கடன் நிறுவனங்களோ, வங்கிகளிடமிருந்து 11 சதவீத வட்டிக்கு கடன் பெற்று ஏழை-எளிய மக்களிடம் 26 சதவீதம் முதல் 48 சதவீதம் வரை வட்டிக்கு கடன் வழங்குகின்றன. அவர்கள் கடன் வசூல் செய்யும் முறையினால் ஆந்திராவிலும், தமிழகத்திலும் நூற்றுக்கணக்கான பெண்கள்தற் கொலை செய்து கொண்டுள்ளனர்.விவசாயிகள் தற்கொலை அதிகரிக்கும் ஆபத்து...தற்போதுள்ள சூழலிலேயே பிரதானமாக நிறுவனக் கடன் கிடைக்காத காரணத்தினால் கடந்த 15 ஆண்டுகளில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள நேரிட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தங்கள் நிறைவேறுமானால், அவர்களுக்கு கிடைத்து வரும் கடன் என்பது மேலும் அரிதாகி தற் கொலை எண்ணிக்கை அதிவேகமாக அதி கரிக்கக்கூடிய ஆபத்து என்பது உள்ளது.
வங்கிகள் தேசியமயமாகி 43 ஆண்டு காலம் கடந்த பின்னணியில் இன்றளவிலும் 50 சத வீதம் மக்களுக்கு வங்கிச் சேவை என்பது மறுக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், ‘கட்டுப் படியாகாத’ கிராமப்புற கிளைகளை மூடி விடும்படி ரிசர்வ் வங்கி உத்தரவிடுகிறது. இத னால், கிராமப்புற மக்களுக்கு தற்போது கிடைத்துவரும் சேவை கூட மறுக்கப்படும் சூழல் நிலவுகிறது.ஒருபுறம், கெட்டிப்படுத்துகிறோம் என்ற பெயரில் பொதுத்துறை வங்கிகளை இணைப் பதற்கு முயற்சிக்கும் மத்திய அரசு, மறுபுறம், கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கிகள் துவங்க முழுமையான அனுமதி அளிக்கிறது. வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் வங்கிகள் துவங்கவும், வங்கிகளாக மாறவும் ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கிறது. கிராமப்புற வங்கிகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் சுவீகரித்துக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதிக்கிறது.ரிசர்வ் வங்கி கவர்னரின் ஒப்புதல் வாக்குமூலம் ஐஐஐ விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தினால் 2018ஆம் ஆண்டு பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.1,75,000 கோடி முதலீடு தேவைப்படும். அவ்வளவு பணத்தை மத்திய அரசு கொடுக்க முடியாத காரணத்தினால் பொதுத்துறை வங்கிகளை தனியார் வங்கிகளாக மாற்று வதைத் தவிர வேறு வழியில்லை என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் திரு. சுப்பா ராவ் சமீபத்தில் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். இதிலிருந்தே இவர்களின் நோக்கம் வெளிப்படையாகத் தெரிகிறது. ஐஐஐ விதி முறைகள் ஏன் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதற்கான எந்தவிதமான தர்க்க நியாயத்தையும் அவர் எடுத்துச் சொல்லவில்லை. அப்படியே கடைப்பிடிக்க வேண்டுமானாலும் கூட முதலீடு செய்வதற்கு பணம் இல்லை என்று கூறும் மத்திய அரசு, கடந்த பட் ஜெட்டில் மட்டும் பல்வேறு வகையில் பெரும் முதலாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய வருமானத்தில் ரூ.5,28,000 கோடி அளவுக்கு விட்டுக் கொடுத்துள்ளது. எனவே, மத்திய அரசின் நோக்கம் பொதுத்துறை வங் கிகளை தனியார்மயமாக்குவதுதான் என்பது தெளிவாக தெரிகிறது. மத்திய அரசின் இந்தக் கொள்கையை கைவிடக் கோரிதான் 10 லட் சம் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் வீதி யில் இறங்கியுள்ளனர்.அத்துடன் * ஊழியர் விரோத - அதிகாரிகள் விரோத கண்டேல்வால் குழு பரிந்துரைகளை நிராகரித்திடுக!* இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலை/ஈட்டுத் தொகை வழங்கும் திட்டத்தை உடனே அமல்படுத்துக!* பென்ஷன் திட்டத்தில் மத்திய அரசு ஊழி யர்களுக்கு இணையான முன்னேற் றத்தை ஏற்படுத்துக!* பணியிலிருந்து ராஜினாமா செய்தவர் களுக்கும் கட்டாய ஓய்வில் அனுப்பப் பட்டவர்களுக்கும் பென்ஷன் தேர்ந் தெடுக்க மற்றொரு வாய்ப்பு வழங்குக!* அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட வேலை நேரத்தை உத்தரவாதப்படுத்துக!*
வாரம் 5 நாட்கள் பணி நாட்களாக மாற்றுக!* வீடு கட்ட கடன், வாகனக் கடன் போன்ற வற்றை அனைத்து வங்கிகளுக்கும் ஒரே மாதிரியாக வழங்கிடுக!* வங்கிப் பணிகளை வெளியாட்களிடம் ஒப் படைக்காதே!* ஊழியர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் தன்னிச்சையான வழிகாட்டுதல்கள் வழங்குவதை கைவிடுக!ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த வேலை நிறுத்தத்திற்கான அறை கூவல் விடுக்கப்பட்டுள்ளது.தகுந்த காலஅவகாசம் கொடுத்து வேலை நிறுத்த அறைகூவல் விடுக்கப்பட்டாலும், மத் திய தொழிலாளர் ஆணையாளருக்கு ஆகஸ்ட் 21ம் தேதிதான் சமரசப் பேச்சுவார்த்தை நடத் துவதற்கான நேரம் கிடைத்தது. இது மத்திய தொழிலாளர் துறையின் அக்கறையற்றப் போக்கையே வெளிப்படுத்துகிறது.வேலை நிறுத்தத்திற்கான அறைகூவல் விடுத்திருக்கும் அதே தேதியில் அதாவது ஆகஸ்ட் 22ம் தேதி இந்த மக்கள் விரோத மசோதாவை கொண்டுவருவதன் மூலமாக மத்திய அரசு தனது பிடிவாதத்தை கைவிடத் தயாராக இல்லை என்பதையே வெளிப் படுத்துகிறது.எனவேதான், வங்கி ஊழியர்கள்-அதிகாரி களின் இந்த நாடு தழுவிய இரு நாட்கள் வேலை நிறுத்தம் தவிர்க்க முடியாததாகி விட்டது. மக்கள் நலன் காக்கும் இந்த தேசப் போராட்டத்திற்கு அனைத்து மக்களும் பேராதரவு நல்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். இந்த 2 வேலை நிறுத்த நாட்களில் ஏற்படும் அசௌகரியத்தை பொறுத்துக் கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.கட்டுரையாளர், பொதுச்செயலாளர், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் - தமிழ்நாடு
No comments:
Post a Comment