ஓய்வூதியம் வயது முதிர்ந்த காலத்தில் வாழ்வின் ஆதாரமாகும். இதிலும் அன்னிய முதலீடு அனுமதி ஓய்வூதிய ஆதாரத்தையே சீர்குலைக்கும்.
சில்லரை வர்த்தகத்தில் அந்நியரை அனுமதித்த மன் மோகன் சிங் அரசு தற்போது காப்பீட்டுத்துறை, பென்சன் துறைகளையும் அந்நியருக்குத் தாரை வார்க்க முடிவு செய்துள்ளது. காப்பீட்டுத்துறையில் 49 சதவீதம் அளவிற்கு அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்றும் பென்சன் துறையில் 29 சதவீதம் அளவிற்குஅந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்றும் வியாழனன்று புதுதில்லியில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வசதியாக கம்பெனிகள் சட்டத்தைத் திருத்தவும் மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீட்டை அதிகரிக்க தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி நாடாளுமன்ற நிலைக்குழுவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா இடதுசாரிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காப்பீட்டுத் துறையில் 49 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மேலும் பென்சன் நிதியை அந்நியர்கள் சூறையாட அனுமதிக்கும் வகையில் அந்தத்துறையில் 26 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.மக்களின் வாழ்வாதரங்களை சீர்குலைக்கும் முடிவை மைய அரசு கைவிடவிடுவது மிகவும் அவசியமாகும்.
No comments:
Post a Comment