தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ஆம்னி பஸ்கள் போர்வையில், சுற்றுலா பஸ்கள், விமான பயணத்துக்கு இணையான கட்டணத்தை, சுற்றுலா பஸ்கள், விமான பயணத் துக்கு இணையான கட்டணத்தை வசூலிக்கத் துவங்கி விட்டன. இவற்றில், டோக்கன் முறையில் டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.
முன்பதிவு:தீபாவளி பண்டிகையை ஒட்டி, தமிழகத்தில் இயக்கப்படும் அனைத்து வழக்கமான பஸ்கள், ரயில்களில், டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டது; அதன் பின் அறிவிக்கப்பட்ட, சிறப்பு
ரயில்கள், பஸ்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டது.மேலும் பல சிறப்பு பஸ்களை இயக்கப் போவதாக அரசு அறிவித்துள்ளது; அது எப்போது என்பது தெரியவில்லை.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் இயக்கப்படும், மாநில அரசின் அனுமதி பெற்றுள்ள, 616 ஆம்னி பஸ்கள், தேசிய அனுமதியுடன், தமிழகத்தில் இயக்கப்படும், 159 ஆம்னி பஸ்கள் என, 775 ஆம்னி பஸ்கள் மட்டுமே, தமிழகத்தில் இயக்கப்பட வேண்டும்.
ஆம்னி "திடீர்' அதிகரிப்பு:ஆனால், தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, 1,350 ஆம்னி பஸ்கள் இயங்குகின்றன. அரசின் கணக்கீட்டுக்கு மேலாக இயக்கப்படும் அனைத்து பஸ்களும், சுற்றுலா பஸ்கள் எனத் தெரிய வந்துள்ளது.ஆம்னி பஸ்களுக்கான அனுமதி, மூன்று மாதம், அதாவது, காலாண்டு என்ற வகையில், ஒரு பயணியின் சீட்டுக்கு, 5,000 ரூபாய் கட்டணமாக அரசுக்கு செலுத்த வேண்டும். அதுவே, சுற்றுலா பஸ்கள் எனில், அந்த அளவுக்கு கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம் இல்லை. சென்னை, மாமல்லபுரம் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா செல்வதாக, வட்டார போக்குவரத்துக் கழக அலுவலகத்தில், அனுமதி பெற்றால் போதுமானது.
சுற்றுலா பஸ்கள் கொள்ளை:இதை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்ட, சுற்றுலா பஸ் உரிமையாளர்கள், தீபாவளி சீசனை பயன் படுத்தி, சுற்றுலா பஸ்களை, ஆம்னி பஸ்களாக இயக்கி வருகின்றனர்.சுற்றுலா வேன்கள், கார்கள், சொகுசு கார்கள், தற்போது முக்கிய நகரங்களுக்கு இடையில் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து துறை அதிகாரிகள், சென்னை கோயம்பேட்டில், பெயரளவுக்கு ஆய்வு நடத்தி வரும் நிலையில், கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் ஆகிய தொழில் நகரங்களில், ஆம்னி பஸ்கள் பெயரில், சுற்றுலா பஸ்களின் இயக்கம், படு ஸ்பீடாக, நடந்து வருகிறது.
மதுரை - சென்னைக்கு ரூ.1,200:இந்த பஸ்கள், ஆம்னி பஸ் களின் வழக்கமான கட்டணத்தை விட, இருமடங்கு கூடுதலாக வசூல் செய்கின்றன. மதுரையில் இருந்து, சென்னைக்கு, ஆம்னி பஸ் கட்டணம், 550 ரூபாயில் துவங்கி, குளிர்சாதன பஸ் எனில், 680 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.ஆனால், நவ.,13, 14 ஆகிய தேதிகளில், மதுரையில் இருந்து சென்னைக்கு, 1,200 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்து, டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. சேலத்தில் இருந்து, சென்னைக்கு, 900 ரூபாயாகவும், கோவையில் இருந்து, சென்னைக்கு, 1,100 ரூபாயாக நிர்ணயித்து, டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னையில் இருந்து திருநெல்வேலி, மதுரை, நாகர்கோவிலுக்கு வழக்கமாக கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் சுற்றுலா பஸ்கள், மேக்சி வேன்கள், கார்கள், தற்போது, பெருங்குளத்தூர், தி.நகர் ஆகிய பகுதிகளில் இருந்து இயக்கப்படுகின்றன.இதற்கான டோக்கன்கள் அனைத்தும், கனஜோராக, அப்பகுதிகளில், விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தடை வருமா?:இது குறித்து ஆம்னி பஸ் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தீபாவளி கட்டண வசூல் சென்னையில் மட்டுமே நடப்பதாகவும், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.ஆனால், தற்போது கட்டண வசூல் கொள்ளையில், ஆம்னி பஸ்கள் போர்வையில், சுற்றுலா பஸ்கள், மேக்சி வேன்கள் ஆகியன ஈடுபட்டு வருகின்றன. இவற்றின் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள், மாமூலுக்கு ஆசைப்பட்டு, எவ்வித நடவடிக்கையும் எடுப்பது இல்லை.இவற்றை முழுமையாக அரசு கட்டுப்படுத்த விரும்பினால், முறையான வரி செலுத்தி உள்ள, ஆம்னி பஸ்களை தவிர, பிற பஸ்களை இயக்க முழுமையாக தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் செய்தி 07.11.2012

No comments:
Post a Comment