இடைக்கால நிவாரணம் முழுத் தீர்வு அல்ல
கோரிக்கை கள் மீது அனைத்துச் சங்கங் களையும் அழைத்துப் பேச வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு இயக்கங்களை நடத்தி மண்டல மாநாடுகள் நடத்தப்பட்டது. இறுதியாக 2.12.2014 அன்று திருச்சியில் நடைபெற்ற வேலைநிறுத்த தேதி அறிவிப்பு மாநாட்டில் 25 ஆயிரம் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் 5.12.2014 அன்று வேலைநிறுத்த அறிவிப்பு கொடுப்பது என்றும் 19.12.2014 அன்றோ அதன் பின்னரோ வேலைநிறுத்தம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
இம்முடிவு போக்குவரத்துக்கழக தொழிலாளர் மத்தியில் ஒரு எழுச்சியை உருவாக்கியது. இது அதிமுக அரசை அசையவைத்து ரூ.1000 இடைக்கால நிவாரணம் என அமைச்சர் அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.அண்ணா தொழிற்சங்கத்தின் ஏமாற்று நாடகம்போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான பொதுக் கோரிக்கை தயாரிக்க, இயக்கங் கள் நடத்திட முன்வராத அண்ணா தொழிற்சங்கம், தொழிலாளர் கோரிக்கைகளுக்கான இயக்கங் களில் கலந்து கொள்வோரை கடைசிவரை மிரட்டியதோடு, ஆப்சென்ட் போட வைத்தது;
ஆனால் இன்று இடைக்கால நிவாரணத்திற்கு பட்டாசு வெடிப்பது, இனிப்பு வழங்குவது அப்பட்டமான ஏமாற்று நாடகமே.அரசின் சூழ்ச்சிபோக்குவரத்துக்கழகத்தில் சேமப்பணியாளராக, தினக் கூலியாக பணிபுரியும் சற்றேறக்குறைய 31 ஆயிரம் தொழிலாளர்களின் தின ஊதியம் உயர்த்தப்படாதது ஏமாற்றம் அளிப்பதோடு தொழிலாளர்களை பிளவுப்படுத்தும் சூழ்ச்சியாகவே சங்கங்கள் பார்க்கிறது.தொழிற்சங்கங்களின் கூட்டுபேர உரிமையை பறிக்கும் தன்னிச்சையான அறிவிப்பை இக்கூட்டம் நிராகரிக்கிறது.
31.8.2013ம் தேதியுடன் ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டது. 1.9.2013 முதல் புதிய ஒப்பந்தம் அமலுக்கு வரவேண்டும். இந்நிலையில் 1.1.2015 முதல் இடைக்கால நிவாரணம் என்பது ஒப்பந்த காலத்தை நீட்டிக்கும் சூழ்ச்சி இந்த அறிவிப்பில் உள்ளதாகவும், 3 ஆண்டு ஒப்பந்த உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என்பதை அரசுக்கு இச்சங்கங்கள் உறுதியாக தெரிவிக்க விரும்பு கிறது.இடைக்கால நிவாரணம் அறிவிக்க அரசு கூறும் காரணம் பொய்யானது ஆகும். உச்சநீதிமன் றத்தில் பேச்சுவார்த்தை நடத்திட தடையாக எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்பதையும் தொழிலாளர் களுக்கு இக்கூட்டம் தெளிவு படுத்துகிறது.
ஊதிய உயர்வு மட்டுமே நமது கோரிக்கை அல்ல, அக விலைப்படி வழங்குவதில் உள்ள குளறுபடி, ஊதியம் வழங்கும் தேதி, பணியாளர் விகிதம், பதவி உயர்வு, ரெவ்யு வழங்குவது, ஓட்டும் தூரம் – ஓட்டும் நேரம், ஆப்சென்ட் போடுவது, கடுமையான தண்டனைகள், சேதாரம் என்ற பெயரில் கொள்ளையடிப்பது, தின ஊதியம் உயர்வு, 240 நாட்கள் பணிமுடித்தவர்களை பணிநிரந்தரம், 1.4.2003க்குப் பின் பணியில் சேர்ந்தவர்களின் வருங்கால வைப்புநிதி பிடித்தம், ஓய்வூதியம், ஓய்வு பெற்றவர்கள் பணப்பலன் வழங்குவது உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளிட்ட அனைத் தையும் பேசித்தீர்வு காண வேண்டுமெனவும் அனைத்து தொழிற்சங்கங்களும் வலியுறுத்து கின்றன.எனவே அரசு உடனடியாக தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும். அரசை பேச்சு வார்த்தை நடத்த வலியுறுத்தி அனைத்து தொழிலாளர்களும் திட்டமிட்டபடி தொடர் போராட்டங்களுக்கு தயாராக வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment