Saturday, 26 October 2019

அலட்சியம்

ஏன்? ஏன்?
18 மணி நேரமாக மூடப்படாத ஆழ்துளை கிணற்றை சுத்தி நிறகும் அதிகாரிகளும் ஊடகங்களும் இந்த நேரம் வரை இது போன்ற மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை கண்டுகொள்ளாதது ஏன்? ஏன்!?

போனஸ்

போனஸ் இனாம் அல்ல!
கொடுபடாத சம்பளம்!!
எப்படி?

இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு வாரச் சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்துள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில்தான் மாத சம்பள முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அதாவது 4 வாரங்களுக்கு ஒரு முறை சம்பளம் கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்பட்டது.

அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால் ஒரு வருடத்திற்கு 52 வாரங்கள் வருகிறது. அப்படியென்றால் 13 மாத சம்பளங்கள் வர வேண்டுமல்லாவா? இதனால் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதாக 1930-ம் ஆண்டு வாக்கில் மகாராஷ்ட்ராவில் உள்ள சில தொழிற்சங்கங்கள் போராட்டத்தை தொடங்கின. தங்களுக்கு ஒரு மாத சம்பளம் தராமல் வஞ்சிக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராடின. 10 ஆண்டு காலம் இந்த போராட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ஒரு மாத சம்பளத்தை வழங்குவது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பிரிட்டிஷ் அரசு ஆலோசனை நடத்தியது. இந்தியாவில் பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின் போது மக்களுக்கு அதிக பணத் தேவை இருக்கும் என்றும், அந்த சமயத்தில் போனஸ் வழங்கப்பட்டால் பொருத்தமாக இருக்கும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து 1940-ம் வருடன் ஜுன் மாதம் 30-ம் தேதி இந்தியாவில் முதன் முதலாக இந்தியாவில் போனஸ் வழங்கப்பட்டது. இதுதான் முதல் போனஸ்.

Wednesday, 16 October 2019

மூளை ரத்த கசிவிற்கு அறுவை சிகிச்சை மருத்துவம் குறைந்த செலவில்

#அன்பு_நண்பர்களே...!!!

நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்...

4-5 நாட்களுக்கு முன் நன்றாக இருந்த என் நண்பனின் அத்தை ( வயது 51) திடீர் என்று மயக்கம் போட, 

கோவையில் உள்ள பிரபலக்கல்லுரியின் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். 

மூளையில் ரத்தக்கசிவு,உடனே அறுவை சிகிச்சை,
8ல் இருந்து 10 லட்சம் ஆகும் என அறிவித்தனர். 

மிரண்டுப் போன நண்பனின் மாமா செய்வதறியாமல் திகைத்த நிலையில்...

அங்கேயே இருந்த ஒரு நல்லிதயம் கொண்ட மருத்துவர் ஒரு நல்ல ஆலோசனை வழங்கினார்.

"மிகச்சிக்கலான இந்த அறுவைச் சிகிச்சை இங்கே மாதம் ஒன்றோ இரண்டோ நடக்கும் நிலையில், 

தினமும் ஐந்து -பத்து சாதாரணமாக நடக்கும் திருவனந்த புரம் அரசு மருத்துவமனைக்கு ( Thirvendram Medical college Hospital) உடனே எடுத்துச்செல்லுங்கள்", எனக்கூறினார். 

உடன், ஒரு கடிதமும் வாங்கிக்கொண்டு ஆம்புலன்ஸில் விரைந்து காலையில் அட்மிட் செய்துள்ளனர். 

உடனே, அட்மிஷன் செய்து நோயாளியின் தன்மைக்கேற்ப பரிசோதனைகள் செய்து, 

அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் மட்டும் வாங்கித் தரச்சொல்கின்றனர்.( ஒரு 40000 to 60000 ஆகலாம்). 

டாக்ட்டர் ஃபீஸ் இல்லை. சரியாகி வீடு திரும்பும்வரை அட்மிஷன் தருகிறார்கள். 

உணவு,மருந்து மாத்திரைகள் நாமே வாங்கிக் கொள்ளவேண்டும்.

நண்பர்களே, 
ஏதோ நம் ஊர் அரசு மருத்துவமனையை மனதில் நினைத்துக்கொண்டு அசிரத்தையாக இருக்காதீர்கள். 

உலகத்தரம் வாய்ந்த, இராணுவக் கட்டுப்பாடுடன் கூடிய மருத்துவமனை அது. 

இதயம்,நரம்பு, மூளை போன்ற மிகச்செலவுப் பிடிக்கும் வியாதிகளுக்கு 

மிக மிகச் சிறப்பான , செலவு மிக மிகக் குறைவாக ஆகும் மருத்துவமனை. 

அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

ரேஷன் அட்டை, 
ஆதார் அட்டை கொண்டு செல்லுங்கள். 

நகை நட்டை விற்று, வீடு தோட்டம் விற்று, 
நீண்ட நாள் சேமிப்பை இழக்காமல் 

சிறந்தச் சிகிச்சையைப் பெறலாம். பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

Trivandrum Medical College Hospital
Casualty Enquiry Number
0471 - 2528300

Important Telephone Numbers...
Superintendent 2442234
RMO 2528246
Casualty 2528300
Blood Bank 2528230
Cath Lab (ICCU) 2528499
CT Scan 2528232
Nursing Superintendent 2528231
Mortuary 2528236
Security officer 2528398
Paying counter 2528461
Anasthaesiaology 2528233
Anatomy 2528371
Applied Nutririon 2528391
Biochemistry 2528399
Cardiology 2528267
Cardiothoracic surgery 2528293
Community Medicine 2528379
Dematology and Venerology 2528213
Forensic Medicine 2528373
Gasroentrology 2528241
Gastro Entrology Surgical 2528295
General Medicine 2528234
General Surgery 2528325
Infectious diseases 2528296
Micro Biology 2528372
Nephrology 2528268
Neurology 2528260
Neuro Surgery 2528224
Gynaecology 2528365
Orthopaedics 2528242
ENT 2528277
Paediatrics 2528331
Paediatric surgery 2528312
Pathology 2528376
Peed Cell 2528369
Pharmacology 2528379
Physical Medicine and Rehabilitation 2528237
Physiology 2528377
Plastic and Reconstructive surgery 2528299
Psychatry 2528222
Radio diagnosis 2528211
Radio therapy 2528232
Respiratory medicine 2448484
Urology 2528282

பிடித்திருந்தால் அதிகம் பகிருங்கள்...

உடல்நலக்குறைவால்_அவதிப்படுவோருக்கு உதவக்கூடும்...

#Address:
Trivandrum Medical College, Medical College PO, Thiruvananthapuram,
Kerala State. India PIN - 695 011

ஒப்பந்த பேச்சு வார்த்தை

சென்னையில் இன்று 16/10/19 Spl ACL பேச்சு வார்த்தை துவங்கும் போதே வேலை நிறுத்த அறிவிப்பு கொடுக்காத சில சங்கங்கள் வந்திருந்ததை "அவர்கள் எவ்வாறு அழைக்கப் பட்டனர்" என கூட்டமைப்பு சங்கங்கள் ஆட்சேபணை கிளப்பியவுடன் அவர்கள் வெளியேற்றப் பட்டனர்

*வேலை நிறுத்தத்தின் போது 86 பேர் மீது பொய் வழக்கு போட்டு சஸ்பெண்ட் செய்து பின்னர் மீளப் பணி கொடுத்த போதிலும், அவர்களில் பலர் ஊர் மாற்றங்கள் ரத்து செய்யப்படவில்லை என்றதும் அவரவர் பழைய கிளைக்கு உடனடியாக மாற்ற உத்திரவிடப்பட்டது*

*சுமார் 5600 RC /RD /De பணிநிரந்தரம் செய்யப்படவில்லை என்றதற்கு 04/11/19ற்குள் இதற்கான தீர்வு கண்டு பட்டியலுடன் வர உத்திரவிடப்பட்டது*

*அடுத்த இறுதி வாய்தா 04/11/19 அன்று கண்டிப்பாக நிர்வாக இயக்குனர்கள் ஆஜராக உத்திரவிடப்பட்டது*

*ஒப்பந்தப்படி பேட்டா மாற்றாத கழகங்கள் உடனடியாக அதை அமுல் படுத்த உத்திரவிடப் பட்டது*

*பழிவாங்கும் அனைத்து ஊர்மாற்றங்களும் ரத்து செய்யப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டது*

*ஒப்பந்த சரத்திற்கு விரோதமாக போடப்பட்ட அரசாணைகள் GO 41 மற்றும் GO 73 செயல்படுத்தக் கூடாது என உத்திரவிடப்பட்டது*

*பணிச்சுமை, அதிகமான வேலை நேரம் பணிபுரிய நிர்பந்திப்பது குறித்து அழுத்தமாக வாதிடப்பட்டது*

*04/11 வாய்தாவிற்கு MDதான் வர வேண்டும். சொல்லப்பட்ட அனைத்து பிரச்சனைகள் தீர்வு சம்மந்தமான அறிக்கை ஆவணங்களுடன் வர வேண்டுமென உத்திரவிடப்பட்டது*

*வேலை நிறுத்தத்தின் போது பழி வாங்கப்பட்ட 86 பேர்களில் பலர் ஓய்வு பெற்று அவர்கள் பணிமுடிவு தீர்வுகள் நிலுவையில் வைக்கப் பட்டுள்ளது தவறு. ஓய்வு பெற்றபின் நடவடிக்கை தொடரக் கூடாது. அவர்களின் settlement உடனே தீர்வு செய்யப்பட வேண்டுமென உத்திரவிடப்பட்டது*

Thursday, 22 August 2019

Tnstc

அரசாணை வெளியீடு

அரசு போக்குவரத்து கழகங்களில், ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 வரை, ஓய்வுபெற்ற, ஓய்வூதியர்களுக்கு, பல்வேறு பணப் பலன்கள் வழங்கப்படாமல் இருந்தன. இந்நிலையில், விடுப்பு சம்பளம், பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பணப் பலன்களை வழங்கும் வகையில், போக்குவரத்து கழகங்கள் வாரியாக, ரூ. 1,093 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.125.55 கோடி, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத் துக்கு ரூ.63.38 கோடி, அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் - ரூ.130.26 கோடி, சேலம் - ரூ.123.63 கோடி, கோவை - ரூ.164,79 கோடி, கும்பகோணம்- ரூ.219.80 கோடி, மதுரை- ரூ.165.66 கோடி, நெல்லை - ரூ.99.93 கோடி என ரூ.1093 கோடி பிரித்து அளிக்கப்படுகிறது.

இதில், ஈட்டிய விடுப்புக்காக ரூ.133 கோடியே 25 லட்சம், பணிக்கொடை- ரூ.457 கோடி, வருங்கால வைப்பு நிதி- ரூ.282 கோடியே 97 லட்சம், ஓய்வூதியத்தை தொகுத்து பெறுதல் ரூ.207 கோடியே 8 லட்சம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரூ.12 கோடியே 70 லட்சம் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.
கதிகலங்கி நிற்கும் ஆட்டோமொபைல் துறை சரிவுக்கான முக்கிய காரணங்கள் இதுதான்..!
இந்த தொகையை ஓய்வு பெற்றவர் களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். வேறு எந்த பயன் பாட்டுக்கும் திருப்பிவிடக்கூடாது. இதில் ஏதேனும் மீறல்கள் இருந்தால் அவை தீவிரமாக கருத்தில் கொள்ளப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, 18 December 2017

MD Tnstc

மேலான் இயக்குனராகிய நான்
தொழிலாளிக்கு

1. சட்டத்தை மீறி வேலை வாங்க மட்டேன்
2. அநியாய தண்டனை தர மாட்டேன்
3. தண்டனையை ரத்து செய்ய / குறைக்க கையூட்டு வாங்க மாட்டேன்
4. சொற்ப காரணங்களுக்கு மெமோ தர மாட்டேன்

6.பேருந்துகளை சரியான பராமரிப்பு செய்து தருவேன்
7. உதிரி பாகங்கள் வாங்குவதில் கமிஷன் பெற மாட்டேன்.......................
என உறுதி ஏற்க தயாரா?
நடத்துனர், ஓட்டுனர் இந்த பேட்ஜை சட்டையில் அணிய வேண்டும் (சேலம்)

Wednesday, 3 February 2016

விபத்துக்களை தடுக்க இயலாதா?

தமிழகத்தில் பேருந்து நிலையங்களைவிட நீதிமன்றங்களில்தான் அதிக பேருந்துகள் நிற்கிறது.

ஏன் நீதிமன்றத்தில் இத்தனை பேருந்துகள் நிற்கிறது...? 

ஏன் நீதிமன்றங்கள் அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய வேண்டும்...? இந்தப் பேருந்துகள் அனைத்தும் விபத்துகளை ஏற்படுத்திவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு  இழப்பீடு தராத பேருந்துகள். சரி... தனியார் பேருந்துகள் ஒன்றைக்கூட நீதிமன்ற வளாகங்களில் காணமுடியவில்லையே... அப்படியென்றால் அவர்கள் விபத்தே ஏற்படுத்துவதில்லையா..?

  அவர்களும் ஏற்படுத்துகிறார்கள். ஆனால், சரியாக இழப்பீடு தந்துவிடுகிறார்கள். அவர்கள் என்றால் அவர்கள் அல்ல; அவர்கள் காப்பீடு செய்த நிறுவனங்கள்.

அப்படியென்றால் அரசு பேருந்துகளுக்கும் தர வேண்டியது தானே...  ஆனால், தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள் ஒன்றுக்கு கூட காப்பீடு செய்யப்படவில்லை.இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் காப்பீடு இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

“தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமாக மொத்தம் 22,500 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இருக்கின்றன. இதில் ஒன்றுகூட காப்பீடு செய்யப்பட்டது இல்லை. போக்குவரத்து கழகங்கள் உண்டாக்குவதற்கு முன்பு வரை அனைத்து பேருந்துகளுக்கும் காப்பீடு செய்யப்பட்டுதான் வந்தன. ஆனால் போகுவரத்து கழகம் உருவாக்கப்பட்ட பின் 1972 -ம் ஆண்டு முதல்,  பேருந்துகளுக்கு காப்பீடு கட்டுவது நிறுத்தப்பட்டுவிட்டன”

“தொழிற் சங்கங்கள் பல முறை இதுகுறித்து போக்குவரத்து கழகத்துடன் பேச்சு வார்த்தை நடத்திவிட்டது. தொடர் போராட்டம் மூலமாக பல அழுத்தங்களை தந்தாகிவிட்டது. ஆனால், போக்குவரத்துக் கழகம் 20,000 க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கும் காப்பீடு கட்டுவது கடினம். விபத்தில் தோராயமாக 200 பேருந்துகள் மட்டுமே சிக்குகின்றன. அவர்களுக்கு வேண்டுமானால். நாம் இழப்பீடு கொடுத்துவிடலாம் எனக் கூறிவிட்டது.
 
தமிழ் நாட்டில் மட்டும்தான் இந்த நிலை. நம் அண்டை மாநிலமான கர்நாடகம், ஆந்திரம் ஆகிய  மாநிலங்களில் உள்ள அரசுப் பேருதுகள் அனைத்தும் முறையாக காப்பீடு செய்யப்பட்டவை. பேருந்து கட்டணம் நிர்ணயம் செய்யும்போது காப்பீடு கட்டணத்தையும் சேர்த்தே நிர்ணயிக்கிறார்கள். அந்த முறையை தமிழ்நாடும் பின்பற்ற வேண்டும்.

பொதுவாக பொது போக்குவரத்து பேருந்து,  9 ஆண்டுகள் ஓடிவிட்டால் அதை பயன்படுத்தக் கூடாது என்று ஒரு விதி இருக்கிறது. ஆனால், ஏறத்தாழ 17,000 பேருந்துகள் ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஓடிய பழமையானவை. இதுவே அடிக்கடி விபத்து நடக்க காரணமாகிறது!''

அரசுப் போக்குவரத்துக் கழகங்களை நாம் குறை கூறி,  தனியார் பேருந்துகளே சிறந்தது என்று, மொத்த போக்குவரத்து துறையையும் தனியார்மயமாக்கிவிட வேண்டும் என எண்ணினால் அது அறியாமை. போக்குவரத்து துறையை தனியாரிடம் கொடுத்துவிட்டால் நிச்சயம் அவர்கள் அதிக வருவாய் வரும் வழித்தடங்களில் மட்டுமே பேருந்தை இயக்குவார்கள். பல கிராமங்கள் பேருந்துகள் இல்லாமல் துண்டிக்கப்பட்டுவிடும்.

இதற்கெல்லாம் மேல் பொது போக்குவரத்து அரசிடம்தான் இருக்க வேண்டும் என்பதை சென்னை பெருவெள்ளம் நமக்கு உணர்த்திவிட்டு சென்றுவிட்டது. சென்னை பெருவெள்ளத்தின் போது, தனியார் பேருந்துகள் இயங்க மறுத்தபோது, அரசு பேருந்துகள் மட்டுமே இயங்கியது. அந்த முகம் தெரியாத பேருந்து ஓட்டுனர்கள் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் செயலாற்றினர். அவர்கள் தியாகம் அளப்பரியது.

Saturday, 4 July 2015

மேடையில் பேச........?

இதுவரை எந்த மேடையிலும் பேசியதில்லை, ஆனால், பேச வேண்டும் என்று ஆசை இருக்கின்றது, ஆனால் எப்படி பேசுவது என்று இருப்பவர்களுக்கு இந்த கட்டுரை ஒரு சிறிய பலனை தரும். மேடையில் ஏறி பேசுவது என்பது சின்ன விஷயமாக இல்லாவிட்டாலும், பயிற்சியாளர்களுக்கு மூலம் நம்மாலும் பெற்றுவிட முடியும். முதலில் நாம் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி பழக வேண்டும். புதிதாக மேடை ஏறுபவர்களுக்கு, மேடையில் பேசுவது என்பது இரண்டாவது விஷயம். முதலில் அவர் மைக் முடிவு போய் நிற்பதே ரொம்ப முக்கியமான ஒன்றாகும். சில பேருக்கு பத்து பேர் இருந்தாலே உட்காருவதற்கு ஒரு கூச்சம், பயம். இதெல்லாம் இயல்பாகவே ஏற்படும். அதனால், நாம் மேடை ஏறியவுடனேயே நன்றாக பேச வேண்டும் என்பதில்லை. முதலில் நாம் மேடை ஏறி பழக வேண்டும். மேடைப் பேச்சைப் பொறுத்த வரை மூன்று விதமாக பிரிக்கலாம்:

1. மேடை ஏறிப் பழக வேண்டும்

2. பேசிப் பழக வேண்டும்

3. திட்டமிட்டு பேச வேண்டும்

இந்த மூன்றையும் நாம் வாழ்க்கையில் செயல்படுத்தினால் நம்மாலும் திறம்பட பேச்சாளராக செயல்பட முடியும். முதலில் மேடை ஏறிப் பழகுதல் பற்றி பார்ப்போம்.

1. சிறு சிறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அதில் கிடைக்கும் வாய்ப்புகளில் சின்ன சின்ன கருத்துக்களைப் பதிவு செய்து பழக வேண்டும்.

பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் பேச்சுப் போட்டிகள், ஊர்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மேடையில் கூச்சம், பயம் போன்றவைகளை போக்கிப் பழக வேண்டும்.

மேடையில் எவ்வளவு பேர் அமர்ந்திருந்தாலும், நாமும் இந்த மேடையில் அமர தகுதியானவர்தான் என்ற மனநிலையை உருவாக்க வேண்டும். அதேப்போன்று, மேடையில் அமர்ந்து இருப்பவர்களுடன் சகஜமாகப் பேசிப் பழக வேண்டும்.

ஒரு மேடையில் ஏறும்போது, நம்மிடம் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்பதை சரிபார்த்து விட்டுச் செல்ல வேண்டும். இடையில் எழுந்து செல்வது போன்று நிலையை ஏற்படுத்தக் கூடாது.

மேடைப் பேச்சாளர்கள் எப்பொழுது கடிகாரம் கட்டியிருந்தால் குறித்த நேரத்தில் நம்முடைய உரையை முடிக்க முடியும். சிறு சிறு மேடைகளை நாமே உருவாக்கி, பழக வேண்டும். அப்பொழுது, மேடை என்பது, நமக்கு சாதாரணமாக போகிவிடும். நமக்கு முன் கீழே இருப்பவர்களுக்கு உட்கார தயக்கம் இல்லை என்கிறபோது, நாம் ஏன் அவர்களுக்கு முன் உட்காருவதற்கு அச்சப்பட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி விடலாம். இதனால்,மேடை ஏறிப் பழகிக் கொண்டே இருக்க வேண்டும். மேடையில் எந்தவிதப் பதற்றமுமின்றி அமரப் பழகிக் கொள்ள வேண்டும்.

2. பேசிப் பழகுதல்:

பேச்சாற்றல் என்பது உடனேயே வருவது என்பது சாத்தியமான ஒன்றல்ல. ஒரு சிலருக்கு இயல்பாகவே அவர்களுடைய பேச்சுத்திறன் சிறப்பாக அமைந்திருக்கும். அதனால், நாமும் அப்படி எதிர்பார்க்க முடியாது.

சாதாரணமாக நாம் ஒருவரிடம் பேசுவதற்கும், மேடையில் ஏறிப் பல்வேறு மனிதர்களுக்கு மத்தியில் பேசுவதற்கும் அதிகமான வித்தியாசங்கள் உள்ளன. அனதால், நாம் முதலில் கிடைக்கக்கூடிய மேடைகளில், தயக்கம் இல்லாமல் பேச வேண்டும். அதில், இருக்கக்கூடிய பிழைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வாய்ப்புகளைப் பயன்படுத்தி பழக வேண்டும. பேசும் போதே நிறுத்தி நிதானமாக பேச முயற்சி செய்ய வேண்டும்.

அத்தோடு, மக்களைப் பார்த்து மேடையில் உள்ளவர்களை பார்த்து, அழகான முறையில் இயல்பாக பேச வேண்டும். நாம் பேசினால் மக்கள் கேட்பார்கள் என்ற எதிர்பார்ப்போடு பேச வேண்டும். அதோடு, நாம் பேசியதை ரெக்கார்டு செய்து, தனிமையில் இருந்து அதை நாம் கேட்க வேண்டும். நாம் எந்த இடத்தில் எப்படி பேசுகின்றோம். சீர்த்திருத்த வேண்டிய இடங்கள் எது என்பதுப்பற்றி, சிந்திக்க வேண்டும். அதோடல்லாமல் நம்முடைய சத்தத்தின் அளவு எந்த இடத்தில் உயர வேண்டும். எந்த இடத்தில் குறைக்க வேண்டும் என்பது பற்றியும் நுணுக்கமாக பார்த்து, அதை அடுத்த மேடையில் சீர்த்திருத்த முயற்சி செய்ய வேண்டும்.

இதுவெல்லாம், நம்முடைய மேடைப் பேச்சை அலங்கரிக்க செய்யும் பயிற்சிகளாகும். அதோடு, நீங்களாக ஒரு மேடையை உருவாக்கி பேசலாம். அதாவது, கண்ணாடியின் முன்பு, தனிமையில் நின்று, உங்களுடைய பெற்றோர்களுககு முன்பு பேசிப் பழகலாம். இதுவெல்லாம், உங்களுடைய பேச்சு திறமைக்கு வலுசேர்க்க உதவும்.

3. திட்டமிட்டு பேசுதல்:

மூன்றாவது நாம் திட்டமிட்டு பேசுதல் என்பதுதான் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதுதான், நீங்கள் பேச்சாளர் என்பதற்கானவைகளை உங்களுக்கு முன் இருப்பவர்களிடம் நிரூபிக்கவும், அவர்களுக்கு நீங்கள் சொல்லக்கூடிய கருத்துக்களை உள்வாங்கவும், உங்களுக்கு பாராட்டுக்களை பெற்றுத் தரவும் உதவக்கூடியதாக இருக்கும்.

எல்லா மேடைகளிலும் நாம் விரும்பக்கூடியது பேசக்கூடிய வாய்ப்பு கிடைக்காது. ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் ஒவ்வொரு விதமான தலைப்புக்களில் நம்மை பேச அழைப்பார்கள். அதுபோன்று, நேரங்களில் நாம் அதற்கான தகவல்களை சேகரித்து, அந்த நிகழ்ச்சியின் கருத்து மாறிவிடாமல் பேசிப் பழக வேண்டும்.

அதோடு, நேரமும் முக்கியமான ஒன்றாகும். கொடுக்கப்பட்ட நேரத்தில், நாம் பேச வேண்டிய தலைப்புக்களில் பேச வேண்டும் என்றால், நம்மிடம் திட்டமிடல் இல்லாமல் அது சாத்தியமாகாது. நாம் பேச வேண்டிய தலைப்புக்கள் தொடர்பான ஆழமான வாசிப்புகள் இருக்க வேண்டும். தகவல் சேகரிப்பில் முழுமையாக ஈடுபட்டால்தான் நாம் அந்த உரையை நிகழ்த்த முடியும்.

அதோடு, நாம் ஒவ்வொரு சின்ன சின்ன தலைப்புகளாக எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தலைப்புக்கும் இவ்வளவு நேரம் என்று நேரத்தை குறித்து பேசிப் பழக வேண்டும். அவ்வாறு பேசிப் பழகும்போது,நமக்கு குறைவான நேரம் கொடுக்கப்பட்டாலும், அதிலும் நம்மால் முழுமையான கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்.

சில நேரங்கள் நாம் பேச வேண்டிய தகவல்களைக்கூட நமக்கு முன்னர் பேசக்கூடியவர் பேசிவிட்டு சென்றாலும்,நாம் அதை சமாளித்து பேசுவதற்குண்டான திறனை வளர்த்துக் கொண்டு, பேசி பழக வேண்டும்.

நாம் பேசப் போகும் மேடையின் மூலம், பல்வேறு மக்கள் அறிவுப் பெற்று, அவர்களிடம் ஒரு சுயமாற்றம் ஏற்பட வேண்டும என்ற எண்ணத்துடன் மேடைக்குச் செல்ல வேண்டும்.

Tuesday, 30 June 2015

யார் நிலம் 5000 ஏக்கர்

அதானி குழுமத்திற்கு கமுதியி்ல் 5000 ஏக்கர் நிலம்.

ராமநாதபுரத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் அதானி குழுமம்- தமிழக அரசு இடையிலான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகிறது.

தமிழக அரசின் சார்பில் கடந்த 2012-ம் ஆண்டு ‘சூரியமின்சக்தி கொள்கை -2012’ஐ முதல்வர் ஜெயலலிதா அறிமுகப் படுத்தினார்.

இந்த கொள்கை படி ஆண்டுக்கு 1000 மெகாவாட் மின்சாரம் சூரிய மின்சக்தி மூலம் பெறுவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பிரதமர் மோடியின் நண்பர் கவுதம் அதானியின் நிறுவனமான அதானி குழுமம், ராமநாதபுரம் மாவட்டம், கமுதியி்ல் 5000 ஏக்கர் பரப்பில் மின் உற்பத்தி மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.

இந்த நிறுவனம், ஒரு மெகாவாட்டுக்கு ரூ.7 கோடி வீதம் 200 மெகாவாட்டுக்கு ரூ.1400 கோடியை முதலீடு செய்கிறது. மேலும், தொடர்ந்து 1000 மெகாவாட் வரை உற்பத்தி திறனை மேம்படுத்தவும் திட்டமிட்டுள் ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் விரைவில் கையெழுத்தாக உள்ளது ரூ.1400 கோடியை முதலீடு செய்கிறது. மேலும், தொடர்ந்து 1000 மெகாவாட் வரை உற்பத்தி திறனை மேம்படுத்தவும் திட்டமிட்டுள் ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் விரைவில் கையெழுத்தாக உள்ளது.

Saturday, 27 June 2015

தொழிலாளர் நலச்சட்டம்

நாட்டில் பெரும்பாலானோருக்கு வேலை அளிக்கும் விவசாயத் துறையினருக்கு ‘நிலம் கையகப்படுத்தும் மசோதா’மூலம் அதிர்ச்சி கொடுத்திருக்கும் மோடி அரசு, அடுத்தகட்ட அதிர்ச்சியைத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கத் தயாராகிவிட்டது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை இருந்திராத வகையில், தொழிலாளர் சட்டங்களைப் பெருமளவில் திருத்த அரசு உத்தேசித்திருப்பதை அரசின் மூத்த அதிகாரிகள் கட்டியம் கூறுகின்றனர்.
நாட்டின் மொத்தத் தொழிலாளர்களில் 8% பேர் மட்டுமே அமைப்புரீதியான பிரிவுகளில் பணிபுரிகின்றனர்.

இப்போதுள்ள சட்டப்படி 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைசெய்யும் நிறுவனங்களில் ‘லே-ஆஃப்’ செய்ய அரசின் அனுமதி தேவை. இந்த வரம்பு நீக்கப்பட்டு 300 தொழிலாளர்கள் வரை வேலைசெய்யும் நிறுவனங்கள் அரசிடம் அனுமதி பெறாமலேயே ‘லே-ஆஃப்’ செய்துகொள்ளப் புதிய சட்டம் வழிவகுக்கும். அதேசமயம், இப்போது ‘லே-ஆஃப்’ சமயத்தில் அளிக்கப்படுவதைப் போல 3 மடங்கு (300%) தொகை அளிப்பது கட்டாயமாக்கப்படும். தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவதில் நிறுவன நிர்வாகங்களுக்கு இப்போது இருக்கும் கட்டுப்பாடுகள்(?!) மேலும் குறைக்கப்படும். தொழிலாளர்கள் புதிய தொழிற்சங்கங்களை எளிதில் நிறுவ முடியாமல் சட்டம் கடுமையாக்கப்படும். வேலைநிறுத்தங்களை மேற்கொள்வதும் சட்டப்படி கடினமாக்கப்படும். அதேவேளையில், குறைந்தபட்ச ஊதிய சட்டம் அனைத்துத் தொழில்களுக்கும் பொருந்தும் வகையில் சட்டம் இயற்றப்படும். ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு, சுகாதாரம், வேலையிடப் பாதுகாப்பு ஆகியவை உறுதிசெய்யப்படும். சுருக்கமாகச் சொன்னால், தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு இப்போதுள்ள குறைந்தபட்ச உரிமைகளும்கூட இனி கேள்விக்குறியாகிவிடும்.

உலகிலேயே கடுமையான தொழிலாளர் சட்டங்களைக் கொண்ட நாடு இந்தியாதான் என்று உலக வங்கியும் முதலீட்டாளர்களும் கருதுகிறார்கள், அதனாலேயே தொழில் வளர்ச்சிக்கேற்ற சூழலை உருவாக்கப் புதிய சட்டங்கள் என்கிறது அரசு. இந்தியத் தொழிலாளர்களைக் கேட்டால் தெரியும், அவர்களுக்குள்ள சட்டப் பாதுகாப்புகள் எந்த அளவுக்கு அரசாலும் நிர்வாகங்களாலும் மதிக்கப்படுகின்றன என்று. வளர்ச்சியையும் வேலைவாய்ப்புகளையும் பெருக்க வேண்டும் என்றால், ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களை எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு அனுப்பும் உரிமை தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதை எந்தக் கல்வி நிறுவனங்கள், எதன் அடிப்படையில் நம்முடைய நவீன நிர்வாகிகளுக்குச் சொல்லிக்கொடுக்கின்றன என்று தெரியவில்லை.

பாஜக அரசு வந்த உடனேயே தொழிலாளர் சட்டங்களில் கை வைக்கும் வேலையைத் தொடங்கிவிட்டது. ஏற்கெனவே தொழிற்சாலை ஆய்வாளர்கள் நினைத்தபடி ஆலைகளுக்குள் சோதனையை நடத்தக் கூடாது என்று தடுத்தாகிவிட்டது (அதன் மூலம் அதிகரித்த உற்பத்தி எவ்வளவு என்று தெரியவில்லை). இப்போது உரிமைப் பறிப்பை எதிர்த்துக் கேள்வி கேட்கும் சட்டரீதியிலான உரிமைகளையும் தொழிலாளர்களிடமிருந்து பறிக்க அரசு முனைகிறது. நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எழுந்த எதிர்ப்பைப் போல இதற்கும் எதிர்க் கட்சிகள் - தொழிற்சங்கங்களின் கடுமையான எதிர்வினை இருக்கும் என்பதால், பிஹார் சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பின் இந்தச் சட்டமுன்வடிவை அரசு கொண்டுவரக் கூடும். அதற்குள் எதிர்த்தரப்பும் தயாராக வேண்டும்!

Monday, 22 December 2014

போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்

டிச.29 முதல் போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்
அனைத்து சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு



டிசம்பர் 29ந்தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என அரசு போக்குவரத்து அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டாக முடிவு செய்துள்ளன.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் தொழிற்சங்க பேரவைகளின் கூட்டுக்கூட்டம் திங்களன்று தொமுச பொதுச் செயலாளர் எம்.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. தொமுச பேரவை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம்(சிஐடியு) , தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களின் தொழிலாளர் சம்மேளனம்(ஏஐடியுசி) மற்றும் ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., டி.எம்.டி.எஸ்.பி., டி.டி.எஸ்.எப்., பி.எம்.எஸ்., பி.எம்.கே., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எப். ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இவர்கள் கூட்டாக கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் 1,43,000 தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் 31.8.2013ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. புதிய ஒப்பந்தத்திற்கான கோரிக்கையை அனைத்து தொழிற்சங்கங்களும் அரசிடம் அளித்துவிட்டன. ஊதிய ஒப்பந்தம் மட்டுமின்றி பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. போக்குவரத்துக் கழகங்கள் சேவைத்துறை என்ற அடிப்படையில் அரசு எவ்வித நிதியுதவியும் செய்வதில்லை.தொழிலாளர்களின் பணம் ரூ.4000 கோடியை வைத்து போக்குவரத்துக் கழகங்களை அரசு நடத்துகிறது. தொழிலாளர்களின் சேமிப்பு பணம் முழுவதையும் அரசு செலவு செய்துவிட்டதால் ஓய்வுபெற்ற ஊழியர்கள் வெறுங்கையுடன் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்.
20,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆண்டுக்கணக்கில் அத்துக்கூலியாக பணிபுரிகின்றனர். இவர்களுக்கு ஒப்பந்தப்படி வழங்கப்படவேண்டிய ஊதியம் தினம் ரூ.560,ஆனால் ரூ.230 மட்டும் சம்பளமாக வழங்கப்படுகின்றது. தற்போதைய இடைக்கால நிவாரண அறிவிப்பில் கூட இந்த தொழிலாளர்களுக்கும் எவ்வித பலனும்இல்லை. தொழிலாளர்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டுவிட்டது. மோசமான அளவில் லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது. அதிகாரிகளும் ஆளும்கட்சியும் இணைந்து கூட்டுக் கொள்ளை அடிக்கின்றனர். 50 சதத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் பழுதடைந்துவிட்டது.எனவே போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். ஊதிய பிரச்சனையை உடனடியாக தீர்க்க வேண்டும். தினக்கூலி, ரிசர்வ் தொழிலாளர்களை உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களின் பணப்பலன்களை வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தி அனைத்து சங்கங்களும் தொடர் இயக்கங்களை நடத்தின. கடந்த 5.9.2014ம் தேதி வேலைநிறுத்த அறிவிப்பும் கொடுத்தன.அரசு, தொழிற்சங்கங்களை அழைத்து பிரச்சனையை பேசி தீர்ப்பதற்கு பதில், திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
1.9.2013ம் தேதி முதல் ஊதிய ஒப்பந்தம் வரவேண்டிய நிலையில் 1.1.2015 முதல் இடைக்கால நிவாரணம் ரூ.1000 என அறிவித்ததுடன் வழக்கு நடைபெறுவதால் பேச்சுவார்த்தையை நடத்த இயலவில்லை என தவறான தகவலை கூறுகிறது.எனவே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்துதான் நியாயங்களை பெறவேண்டிய கட்டாயத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது.போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம், தமிழக மக்களை பாதிக்கும் என்ற நிலையிலும், பொதுமக்கள் தொழிலாளர்களின் நியாயங்களை புரிந்துகொண்டு வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தர வேண்டுகிறோம்.26.12.2014ம் தேதி சென்னை பல்லவன் இல்லம் முன்பு வேலைநிறுத்த விளக்க கூட்டம் நடைபெறும்.29.12.2014ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்வது என இக்கூட்டம் ஏகமனதாக முடிவு செய்கிறது.
நியாயங்களை வென்றெடுக்க தொழிலாளர்களை சங்கபேதமின்றி வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

Saturday, 13 December 2014

இடைக்கால நிவாரணம்

இடைக்கால நிவாரணம் முழுத் தீர்வு அல்ல
கோரிக்கை கள் மீது அனைத்துச் சங்கங் களையும் அழைத்துப் பேச வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு இயக்கங்களை நடத்தி மண்டல மாநாடுகள் நடத்தப்பட்டது. இறுதியாக 2.12.2014 அன்று திருச்சியில் நடைபெற்ற வேலைநிறுத்த தேதி அறிவிப்பு மாநாட்டில் 25 ஆயிரம் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் 5.12.2014 அன்று வேலைநிறுத்த அறிவிப்பு கொடுப்பது என்றும் 19.12.2014 அன்றோ அதன் பின்னரோ வேலைநிறுத்தம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
இம்முடிவு போக்குவரத்துக்கழக தொழிலாளர் மத்தியில் ஒரு எழுச்சியை உருவாக்கியது. இது அதிமுக அரசை அசையவைத்து ரூ.1000 இடைக்கால நிவாரணம் என அமைச்சர் அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.அண்ணா தொழிற்சங்கத்தின் ஏமாற்று நாடகம்போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான பொதுக் கோரிக்கை தயாரிக்க, இயக்கங் கள் நடத்திட முன்வராத அண்ணா தொழிற்சங்கம், தொழிலாளர் கோரிக்கைகளுக்கான இயக்கங் களில் கலந்து கொள்வோரை கடைசிவரை மிரட்டியதோடு, ஆப்சென்ட் போட வைத்தது;
ஆனால் இன்று இடைக்கால நிவாரணத்திற்கு பட்டாசு வெடிப்பது, இனிப்பு வழங்குவது அப்பட்டமான ஏமாற்று நாடகமே.அரசின் சூழ்ச்சிபோக்குவரத்துக்கழகத்தில் சேமப்பணியாளராக, தினக் கூலியாக பணிபுரியும் சற்றேறக்குறைய 31 ஆயிரம் தொழிலாளர்களின் தின ஊதியம் உயர்த்தப்படாதது ஏமாற்றம் அளிப்பதோடு தொழிலாளர்களை பிளவுப்படுத்தும் சூழ்ச்சியாகவே சங்கங்கள் பார்க்கிறது.தொழிற்சங்கங்களின் கூட்டுபேர உரிமையை பறிக்கும் தன்னிச்சையான அறிவிப்பை இக்கூட்டம் நிராகரிக்கிறது.
31.8.2013ம் தேதியுடன் ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டது. 1.9.2013 முதல் புதிய ஒப்பந்தம் அமலுக்கு வரவேண்டும். இந்நிலையில் 1.1.2015 முதல் இடைக்கால நிவாரணம் என்பது ஒப்பந்த காலத்தை நீட்டிக்கும் சூழ்ச்சி இந்த அறிவிப்பில் உள்ளதாகவும், 3 ஆண்டு ஒப்பந்த உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என்பதை அரசுக்கு இச்சங்கங்கள் உறுதியாக தெரிவிக்க விரும்பு கிறது.இடைக்கால நிவாரணம் அறிவிக்க அரசு கூறும் காரணம் பொய்யானது ஆகும். உச்சநீதிமன் றத்தில் பேச்சுவார்த்தை நடத்திட தடையாக எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்பதையும் தொழிலாளர் களுக்கு இக்கூட்டம் தெளிவு படுத்துகிறது.
ஊதிய உயர்வு மட்டுமே நமது கோரிக்கை அல்ல, அக விலைப்படி வழங்குவதில் உள்ள குளறுபடி, ஊதியம் வழங்கும் தேதி, பணியாளர் விகிதம், பதவி உயர்வு, ரெவ்யு வழங்குவது, ஓட்டும் தூரம் – ஓட்டும் நேரம், ஆப்சென்ட் போடுவது, கடுமையான தண்டனைகள், சேதாரம் என்ற பெயரில் கொள்ளையடிப்பது, தின ஊதியம் உயர்வு, 240 நாட்கள் பணிமுடித்தவர்களை பணிநிரந்தரம், 1.4.2003க்குப் பின் பணியில் சேர்ந்தவர்களின் வருங்கால வைப்புநிதி பிடித்தம், ஓய்வூதியம், ஓய்வு பெற்றவர்கள் பணப்பலன் வழங்குவது உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளிட்ட அனைத் தையும் பேசித்தீர்வு காண வேண்டுமெனவும் அனைத்து தொழிற்சங்கங்களும் வலியுறுத்து கின்றன.எனவே அரசு உடனடியாக தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும். அரசை பேச்சு வார்த்தை நடத்த வலியுறுத்தி அனைத்து தொழிலாளர்களும் திட்டமிட்டபடி தொடர் போராட்டங்களுக்கு தயாராக வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறோம்.

Friday, 31 October 2014

ஆபாச தகவல் Google search வராமல் Lock செய்வது எப்படி..!!?

ஆபாச  தகவல் Google search வராமல் Lock செய்வது எப்படி..!!?

நமது எல்லோருடைய வீட்டிலும் computer அல்லது Laptop System இருக்கிறது.
இதனை மனைவி, மக்கள் என அனைவரும் தினசரி உபயோகப் படுத்துகிறோம்......
பல தகவல்கள் Google search ல் நாம் தேடும் போது யதார்த்தமாகவோ, Spelling mistake ஏற்படும் போது ஆபாச தகவல்கள், படங்கள் என வந்து மிகவும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடுகிறது என்பது உண்மையே?...

ஆபாச தகவல் Google search ல் வராமல் Lock செய்வது எப்படி..?
முதலில் Google தளம் சென்று
User name, password கொடுத்து Login செய்யுங்கள்...
பிறகு
Setting click செய்யுங்கள்...
அல்லது
http://www.Google.com/preferences ஐ open செய்து...
Safe search filtering சென்று உங்களுக்கு தேவையான நிறுவனங்கள் Select செய்து கொண்டு முடிந்த பின்பு,
Back ல் மீண்டும் வந்து...
Safe search filtering கீழே உள்ள Lock safe search ஐ click செய்யுங்கள்...
Locking process நடைபெறும்...
பிறகு
Safe search locked என தோன்றும்...
சரியாக Lock ஆகிவிட்டதா? மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்..!!!
அவ்வளவு தான் ஆபாசம் சம்பந்தமாக எந்த தகவலும் உங்கள் System க்கு Google வழங்காது...
நீங்கள் Lock செய்த அடையாளமாக Google search page ல் வண்ண பந்துகள் தோன்றும்...
(Unlock செய்தும் கொள்ளலாம்..??)