வங்கி ஊழியர்களின் தேசபக்தப் போராட்டம்
மத்திய அரசின் மக்கள் விரோத சட்டத் திருத்தங்களை கண்டித்து நாடு முழுவதும் உள்ள 10 இலட்சம் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் ஆகஸ்ட் 22, 23 ஆகிய இரு நாட்களும் முழுமையான வேலை நிறுத்தத் தில் ஈடுபட உள்ளனர். இதற்கான அறை கூவலை பி.இ.எஃப்.ஐ. உள்ளிட்ட 9 சங்கங் களின் கூட்டமைப்பான யு.எஃப்.பி.யு. விடுத்துள்ளது. வங்கிகள் ஒழுங்கமைப்பு சட்டம், வங்கிகள் தேசியமயமாக்கல் சட்டம் மற்றும் போட்டிக் குழுமம் சட்டம் ஆகிய 3 சட்டங்களில் வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி திருத்தங்களை கொண்டுவருவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
