·
ஓட்டுநர், நடத்துநர்
பணிக்காக ஆள் எடுப்பதற்காக வேலைவாய்ப்பு
அலுவலகம் மூலம் 4 ஆயிரம்
பேர் வரை அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால்,
1000 பேர் மட்டுமே
நேர்முகத் தேர்வுக்கு வந்துள்ளனர். இவர்களில் தேர்வு
செய்யப்பட்டவர்கள் சிலரும்,
பணியில் சேர விருப்பமில்லை என்று
தெரிவித்து விட்டதாகவும் தகவல்
தெரியவந்துள்ளது.
ஆள் பற்றாக்குறை காரணமாக மாநகரப் போக்குவரத்து
கழக (எம்.டி.சி.) பணிமனைகளில் தினமும் 400 பஸ்கள்
வரை இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படுவது தெரியவந்துள்ளது.
அத்துடன் டீசல் விலையும்
உயர்த்தப்பட்டிருப்பதால் கடும் வருவாய் இழப்பை மாநகரப் போக்குவரத்துக் கழகம்
சந்தித்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் மொத்தம் 3,497 பஸ்கள் உள்ளன. இவற்றில் 275 பஸ்கள் உபரி பஸ்கள். மீதமுள்ள 3,222 பஸ்கள் 748
வழித் தடங்களில் தினமும் இயக்கப்பட வேண்டும்.
ஆனால், இப்போது
ஆள் பற்றாக்குறை காரணமாக மொத்தமுள்ள 25 பணிமனைகளில் தினமும் 200
முதல் 400 பஸ்கள் வரை இயக்கப்படாமல் நிறுத்தி
வைக்கப்படுகின்றன.
இதனால்,