Saturday, 5 May 2012

Speed Breakers on Roads

தமிழக உள்ளூர் சாலைகளில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த ஏற்படுத்தப்படும் வேகத்தடைகள், விதிகளுக்கு புறம்பாக அமைக்கப் படுவதால், விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன.

உள்ளூர் சாலைகளில் விபத்து ஏற்படக் கூடாது என்பதற்காக, தேவையான இடங்களில் வேகத்தடைகள் ஏற்படுத்தப் படுகின்றன. பள்ளிகள், சாலை குறுக்கீடுகள், குடியிருப்புப் பகுதி சாலைகளிலும், இவை அமைக்கப் பட்டு உள்ளன.

என்ன சொல்கிறது விதி?இந்தியா முழுமைக்குமான, வேகத்தடை குறித்த கட்டுப்பாடுகளை, "தி இந்தியன் ரோட்ஸ் காங்கிரஸ்' என்ற அமைப்பு முடிவு செய்கிறது. இதிலுள்ள, "போக்குவரத்து பொறியாளர்கள் குழு' கூடி, விதிமுறைகளை வரையறுக்கின்றனர்.
பிப்., 1986ம் ஆண்டு, போபாலில் கூடிய இந்த குழு, வேகத்தடை அமைப்பது
குறித்த விதிகளை வெளியிட்டது. அதில் உள்ள தகவல்:
* நகரப் பகுதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் தெருக்களில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக, வேகத்தடைகள் அமைக்க வேண்டும். ஓட்டுனர்களின் கவனத்துக்கு தெரியும்படி, இதற்கான எச்சரிக்கை அறிவிப்புகள் அமைக்கப்பட வேண்டும்.
* சாதாரண வாகன போக்குவரத்துள்ள சாலைகளில், வேகத்தை மணிக்கு 25 கி.மீ., அளவுக்கு குறைக்க, 3.7 மீ., நீளத்துக்கு, 10 செ.மீ., உயரத்துக்கு வேகத்தடை அமைக்கப்பட வேண்டும்.
* டிரக்குகள், பேருந்துகள், பெரிய "வீல் பேஸ்' கொண்டிருப்பதால், வேகத் தடைகளை கடப்பது சிரமம் என உணரப்பட்டு, 1.5 மீ., கொண்ட நீளமான தடைகள் அமைக்க பரிந்துரைக்கப் பட்டது.
* சில இடங்களில், வாகன வேகத்தை முழுவதுமாக குறைக்கும் நோக்கில், 100 மீ., அல்லது 120 மீ., பகுதிக்குள், குறிப்பிட்ட இடைவெளியில் நான்கு வேகத்தடைகளும் அமைக்கலாம்.
* "டி' அமைப்பில் இணையும் சாலைகள், ரயில் பாதைகள் குறுக்கே வரும் இடங்களில், வளைவான சாலைகளில், வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும்; பாலங்களில் வேகத்தடைகள் அமைக்கக் கூடாது.

காற்றில் பறக்கும் விதிகள்:ஆனால், இந்த விதிகள் பெரும்பாலும் பின்பற்றப் படுவதில்லை. சாலைகளில் எந்த இடத்திலும், விதிமுறைகளில் கூறப்பட்டுள்ள உயரத்தில் வேகத்தடைகள் அமைப்பதில்லை. சில இடங்களில், ஒரு அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.அதேபோல், உள்ளூர் நெடுஞ்சாலைகளில் மட்டுமே, வேகத்தடை மற்றும் தொடர் உயரத்தடை அமைத்து உள்ளதற்கான எச்சரிக்கை பலகைகள், ஆங்காங்கே வைக்கப் பட்டுள்ளன. குடியிருப்புப் பகுதிகளில் எச்சரிக்கை பலகையோ, சாலைகளில் ஒளிரும் அமைப்போ, எதுவும் இருப்பதில்லை.

எச்சரிக்கை அமைப்பு: வேகத்தடைகள் அமைத்துள்ளதை, வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில், முதல் வேகத்தடை அமைந்துள்ள இடத்துக்கு, 40 மீ., முன்பாக, அதற்குரிய எச்சரிக்கை பலகை இருக்க வேண்டும்.வேகத்தடைகள் மீது கறுப்பு, வெள்ளை பூச்சு இருக்க வேண்டும். இரவு நேரத்தில் தெளிவாக தெரியும்படி, ஒளிரும் பூச்சு மற்றும் தேவையான ஒளிரும் சாதனமான, "கேட்ஸ் ஐ' அமைப்புகளும், அதில் தேவை. அதேசமயம், வாகனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம், அவை அமைய வேண்டும்.

Thanks to Dinamalar 5.5.12

Friday, 4 May 2012

ஓட்டுனர்களுக்கு பயிற்ச்சி


பயிற்ச்சி மட்டுமே விபத்தை தடுக்குமா?

கும்மிடிபூண்டி ஓட்டுனர் பயிற்ச்சி மையம் ரூ 15 கோடி செலவில் சர்வதேச தரத்திற்க்கு உயர்த்தப்படும்,தமிழக முதல்வர் அறிவிப்பு. சிறந்த ஓட்டுனர்களை உருவாக்கி விபத்துக்களை தவிர்ப்போம்.அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் வரவேற்ற அறிவிப்பு. ஓட்டுனர்களால் மட்டுமே விபத்தை தடுத்துவிட முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது.சாலையை உபயோகிக்கும் அனத்து தரப்பினரும் பொறுமையுடன் சாலை விதிகளை கடைபிடித்தாலன்றி விபத்துகளை தவிர்க்க முடியாது. அரசுக்கு வருவாயை அள்ளித்தரும் குடிமகன்களால் ஏற்படும் விபத்துக்கள் மிக அதிகம்.
சாலையை உபயோகிக்கும் ஒவ்வொருவரும் சாலையை உபயோகிக்கும் நான் மற்றவர்களுக்கு தடையாக ஒருபோதும் இருக்க மாட்டேன் என உறுதி ஏற்று நடந்தால் 90 சத விபத்துக்கள் நிகழாது.
கிளைச்சாலையிலிருந்து முதன்மை சாலைக்கு (Main road)  செல்லும் போது நின்று கவனித்து செல்பவர்கள் மிகவும் சொற்பம்.Lane Disipline கடைபிடிக்காமல் Zigzag ஆக ஒட்டுபவர்கள் ஏராளம்.வலதுபுறம் இருந்து வரும் வாகனத்திற்க்கு முதலில் வழி விடுகிறோமா நாம்?.வாகனம் ஓட்டும்போது அலைபேசியில் பேசாதவர்கள் எத்தனை பேர்?.
விபத்தின் தன்மையை ஆராயமல் கனரக (பெரிய) வாகன ஒட்டியை மட்டும் விபத்திற்க்கு பொறுப்பாக்கும் நடைமுறையை காவல்துறையும் அரசும் பின்பற்றுவதே பல்வேறு விபத்துக்களுக்கு வழிவிடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
சிறந்த நல்ல பயிற்ச்சி பெற்ற கனரக ஓட்டுனர்களை உருவாக்குவதனால் மட்டும் விபத்து தடுக்கப்படும் என்பது பகல்கனவே ஆகும்.
ஒரு பங்கு சாலை வரிவாக்கம் செய்யப்படுவதற்க்குள் நூறு பங்கு வாகனம் பெருகுகிறது. பொது போக்குவரத்து கட்டமைப்பை மேன்படுத்தி வாகன பெருக்கத்தை கட்டுக்குள் வைக்காதவரை விபத்துக்களை தடுப்பது என்பது கானல் நீரே.

Thursday, 19 April 2012

போக்குவரத்துத் தொழிலாளர் குமுறல்



தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்சனைகள் தீரும் என்ற எதிர்பார்ப்பு தொழிலாளர்களிடம் இருந்தது. அதற்கு நேர்மாறாக தமிழக அரசு மற்றும் கழகங்களின் செயல்பாடுகள்அமைந்துள்ளன.அண்ணா தொழிற்சங்க முன்னணி ஊழியர்களின் செயல்பாடுகளும் தொழிலாளர் நலனை சார்ந்திராமல்தங்கள் கட்சியின் ஆட்சியை பாதுகாக்கும் வகையிலேயே உள்ளது. திமுக ஆட்சியில் இதுவரை இல்லாத புதுமையாக ரிசர்வ் தொழிலாளர்களாக சுமார் 42,000 பேரை ஓட்டுநர்- நடத்துநர்களாக பணிநிய மனம் செய்து, குறைந்த கூலிகொடுத்து சுரண்டும் நிலையினை போக்குவரத்துக் கழகங்களில் அமலாக்கினர்.

அன்றைய அமைச்சர் கே.என்.நேருவிடம் பேச்சுவார்த்தையில் இது குறித்து

Thursday, 12 April 2012

போக்குவரத்து தொழிலாளி மாத இதழ்கள்

போக்குவரத்து தொழிலாளி மாத இதழ்கள்

2012 சனவரி மாத போக்குவரத்து தொழிலாளி ஏற்கனவே இணையத்தில் உலா வருகிறது.இந்தஇணைப்பில் படிக்கலாம்.
2012 சனவரி மாத போக்குவரத்து தொழிலாளி

இப்பொழுது FEB 2012,MARCH 2012,APRIL 2012 PVT books இணையத்தில் கிடைக்கிறது.இணைப்புக்கள் கீழே.



பிப்ரவரி மாத போக்குவரத்து தொழிலாளி






மார்ச்சு மாத போக்குவரத்து தொழிலாளி








ஏப்ரல் மாத போக்குவரத்து தொழிலாளி

Friday, 6 April 2012

உயிருக்கு பாதுகாப்பில்லாத தொழில்


போக்கு வரத்து தொழிலாளியின் பரிதாப நிலை.

ஆத்தார் கிளையிலிருந்து ரூட் எண் 31 ஆத்தூர் டு கோவிந்தம்பாளையம் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இப்பேருந்து 04.04.2012 அன்று மாலை கோவிந்தம்பாளையத்திலிருந்து ஆத்தூர் செல்லும் பொழுது பேருந்தில் ஏறிய ஒரு பயணி பணியிலிருந்த நடத்துனர் முருகேசனிடம் தகராறு செய்து நடத்துனரை ஓடும் பேருந்திலிருந்து கீழே தள்ளிவிட்டார். கீழே விழுந்த

Saturday, 31 March 2012

PVT

போக்குவரத்து தொழிலாளி இப்பொழுது இணையத்தில் EBookஆக.
   
                                                                     
அரசுபோக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சார்பாக மாத இதழான போக்குவரத்து தொழிலாளி மின்புத்தகமாக இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சனவரி மாதPVTசொடுக்கி இறக்கம் செய்து கொள்ளலாம்.



Friday, 16 March 2012

P.F வட்டி

   ஓய்வூதியம் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில் தொழிலாளர்களின் வைப்பு நிதியின் வட்டியை 9.5% இருந்து 8.25% ஆக குறைத்து பெரும் சாதனை படைத்திருக்கிறது மைய அரசு. மாத சம்பளம் பெறும் தொழிலாளர்கள் வருமான வரி உச்சவரம்பு உயர்வு 3 முதல் 5 லட்சம் வரை உயரும் என பெரிதும் எதிர்பார்த்த நிலையில் வெரும் 2 லட்சமாக அறிவித்து மிக பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. மத்திய பட்ஜெட். உ.பி.மாநில தேர்தல் தோல்விக்கு விலைவாசி உயர்வே காரணம் என சோனியா கூறிய போதிலும் மானியங்களை வெட்டி கடும் விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்திருக்கிறது. 4.5 கோடி ருபாய்களுக்கு மேல் சாதாரண மற்றும் நடுத்தர மக்களின் மீது வரியை திணித்து விட்டு பெரும் முதலாளிகள் மற்றும் கார்போரேட் நிறுவனங்களுக்கு இதே அளவிற்க்கு மேல் வரி விலக்கும் கொடுத்து சாதாரண மக்களை சாகடிக்கும் பட்ஜெட்டாக உள்ளது.