Monday, 22 December 2014

போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்

டிச.29 முதல் போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்
அனைத்து சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு



டிசம்பர் 29ந்தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என அரசு போக்குவரத்து அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டாக முடிவு செய்துள்ளன.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் தொழிற்சங்க பேரவைகளின் கூட்டுக்கூட்டம் திங்களன்று தொமுச பொதுச் செயலாளர் எம்.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. தொமுச பேரவை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம்(சிஐடியு) , தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களின் தொழிலாளர் சம்மேளனம்(ஏஐடியுசி) மற்றும் ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., டி.எம்.டி.எஸ்.பி., டி.டி.எஸ்.எப்., பி.எம்.எஸ்., பி.எம்.கே., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எப். ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இவர்கள் கூட்டாக கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் 1,43,000 தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் 31.8.2013ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. புதிய ஒப்பந்தத்திற்கான கோரிக்கையை அனைத்து தொழிற்சங்கங்களும் அரசிடம் அளித்துவிட்டன. ஊதிய ஒப்பந்தம் மட்டுமின்றி பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. போக்குவரத்துக் கழகங்கள் சேவைத்துறை என்ற அடிப்படையில் அரசு எவ்வித நிதியுதவியும் செய்வதில்லை.தொழிலாளர்களின் பணம் ரூ.4000 கோடியை வைத்து போக்குவரத்துக் கழகங்களை அரசு நடத்துகிறது. தொழிலாளர்களின் சேமிப்பு பணம் முழுவதையும் அரசு செலவு செய்துவிட்டதால் ஓய்வுபெற்ற ஊழியர்கள் வெறுங்கையுடன் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்.
20,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆண்டுக்கணக்கில் அத்துக்கூலியாக பணிபுரிகின்றனர். இவர்களுக்கு ஒப்பந்தப்படி வழங்கப்படவேண்டிய ஊதியம் தினம் ரூ.560,ஆனால் ரூ.230 மட்டும் சம்பளமாக வழங்கப்படுகின்றது. தற்போதைய இடைக்கால நிவாரண அறிவிப்பில் கூட இந்த தொழிலாளர்களுக்கும் எவ்வித பலனும்இல்லை. தொழிலாளர்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டுவிட்டது. மோசமான அளவில் லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது. அதிகாரிகளும் ஆளும்கட்சியும் இணைந்து கூட்டுக் கொள்ளை அடிக்கின்றனர். 50 சதத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் பழுதடைந்துவிட்டது.எனவே போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். ஊதிய பிரச்சனையை உடனடியாக தீர்க்க வேண்டும். தினக்கூலி, ரிசர்வ் தொழிலாளர்களை உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களின் பணப்பலன்களை வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தி அனைத்து சங்கங்களும் தொடர் இயக்கங்களை நடத்தின. கடந்த 5.9.2014ம் தேதி வேலைநிறுத்த அறிவிப்பும் கொடுத்தன.அரசு, தொழிற்சங்கங்களை அழைத்து பிரச்சனையை பேசி தீர்ப்பதற்கு பதில், திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
1.9.2013ம் தேதி முதல் ஊதிய ஒப்பந்தம் வரவேண்டிய நிலையில் 1.1.2015 முதல் இடைக்கால நிவாரணம் ரூ.1000 என அறிவித்ததுடன் வழக்கு நடைபெறுவதால் பேச்சுவார்த்தையை நடத்த இயலவில்லை என தவறான தகவலை கூறுகிறது.எனவே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்துதான் நியாயங்களை பெறவேண்டிய கட்டாயத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது.போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம், தமிழக மக்களை பாதிக்கும் என்ற நிலையிலும், பொதுமக்கள் தொழிலாளர்களின் நியாயங்களை புரிந்துகொண்டு வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தர வேண்டுகிறோம்.26.12.2014ம் தேதி சென்னை பல்லவன் இல்லம் முன்பு வேலைநிறுத்த விளக்க கூட்டம் நடைபெறும்.29.12.2014ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்வது என இக்கூட்டம் ஏகமனதாக முடிவு செய்கிறது.
நியாயங்களை வென்றெடுக்க தொழிலாளர்களை சங்கபேதமின்றி வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

Saturday, 13 December 2014

இடைக்கால நிவாரணம்

இடைக்கால நிவாரணம் முழுத் தீர்வு அல்ல
கோரிக்கை கள் மீது அனைத்துச் சங்கங் களையும் அழைத்துப் பேச வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு இயக்கங்களை நடத்தி மண்டல மாநாடுகள் நடத்தப்பட்டது. இறுதியாக 2.12.2014 அன்று திருச்சியில் நடைபெற்ற வேலைநிறுத்த தேதி அறிவிப்பு மாநாட்டில் 25 ஆயிரம் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் 5.12.2014 அன்று வேலைநிறுத்த அறிவிப்பு கொடுப்பது என்றும் 19.12.2014 அன்றோ அதன் பின்னரோ வேலைநிறுத்தம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
இம்முடிவு போக்குவரத்துக்கழக தொழிலாளர் மத்தியில் ஒரு எழுச்சியை உருவாக்கியது. இது அதிமுக அரசை அசையவைத்து ரூ.1000 இடைக்கால நிவாரணம் என அமைச்சர் அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.அண்ணா தொழிற்சங்கத்தின் ஏமாற்று நாடகம்போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான பொதுக் கோரிக்கை தயாரிக்க, இயக்கங் கள் நடத்திட முன்வராத அண்ணா தொழிற்சங்கம், தொழிலாளர் கோரிக்கைகளுக்கான இயக்கங் களில் கலந்து கொள்வோரை கடைசிவரை மிரட்டியதோடு, ஆப்சென்ட் போட வைத்தது;
ஆனால் இன்று இடைக்கால நிவாரணத்திற்கு பட்டாசு வெடிப்பது, இனிப்பு வழங்குவது அப்பட்டமான ஏமாற்று நாடகமே.அரசின் சூழ்ச்சிபோக்குவரத்துக்கழகத்தில் சேமப்பணியாளராக, தினக் கூலியாக பணிபுரியும் சற்றேறக்குறைய 31 ஆயிரம் தொழிலாளர்களின் தின ஊதியம் உயர்த்தப்படாதது ஏமாற்றம் அளிப்பதோடு தொழிலாளர்களை பிளவுப்படுத்தும் சூழ்ச்சியாகவே சங்கங்கள் பார்க்கிறது.தொழிற்சங்கங்களின் கூட்டுபேர உரிமையை பறிக்கும் தன்னிச்சையான அறிவிப்பை இக்கூட்டம் நிராகரிக்கிறது.
31.8.2013ம் தேதியுடன் ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டது. 1.9.2013 முதல் புதிய ஒப்பந்தம் அமலுக்கு வரவேண்டும். இந்நிலையில் 1.1.2015 முதல் இடைக்கால நிவாரணம் என்பது ஒப்பந்த காலத்தை நீட்டிக்கும் சூழ்ச்சி இந்த அறிவிப்பில் உள்ளதாகவும், 3 ஆண்டு ஒப்பந்த உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என்பதை அரசுக்கு இச்சங்கங்கள் உறுதியாக தெரிவிக்க விரும்பு கிறது.இடைக்கால நிவாரணம் அறிவிக்க அரசு கூறும் காரணம் பொய்யானது ஆகும். உச்சநீதிமன் றத்தில் பேச்சுவார்த்தை நடத்திட தடையாக எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்பதையும் தொழிலாளர் களுக்கு இக்கூட்டம் தெளிவு படுத்துகிறது.
ஊதிய உயர்வு மட்டுமே நமது கோரிக்கை அல்ல, அக விலைப்படி வழங்குவதில் உள்ள குளறுபடி, ஊதியம் வழங்கும் தேதி, பணியாளர் விகிதம், பதவி உயர்வு, ரெவ்யு வழங்குவது, ஓட்டும் தூரம் – ஓட்டும் நேரம், ஆப்சென்ட் போடுவது, கடுமையான தண்டனைகள், சேதாரம் என்ற பெயரில் கொள்ளையடிப்பது, தின ஊதியம் உயர்வு, 240 நாட்கள் பணிமுடித்தவர்களை பணிநிரந்தரம், 1.4.2003க்குப் பின் பணியில் சேர்ந்தவர்களின் வருங்கால வைப்புநிதி பிடித்தம், ஓய்வூதியம், ஓய்வு பெற்றவர்கள் பணப்பலன் வழங்குவது உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளிட்ட அனைத் தையும் பேசித்தீர்வு காண வேண்டுமெனவும் அனைத்து தொழிற்சங்கங்களும் வலியுறுத்து கின்றன.எனவே அரசு உடனடியாக தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும். அரசை பேச்சு வார்த்தை நடத்த வலியுறுத்தி அனைத்து தொழிலாளர்களும் திட்டமிட்டபடி தொடர் போராட்டங்களுக்கு தயாராக வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறோம்.

Friday, 31 October 2014

ஆபாச தகவல் Google search வராமல் Lock செய்வது எப்படி..!!?

ஆபாச  தகவல் Google search வராமல் Lock செய்வது எப்படி..!!?

நமது எல்லோருடைய வீட்டிலும் computer அல்லது Laptop System இருக்கிறது.
இதனை மனைவி, மக்கள் என அனைவரும் தினசரி உபயோகப் படுத்துகிறோம்......
பல தகவல்கள் Google search ல் நாம் தேடும் போது யதார்த்தமாகவோ, Spelling mistake ஏற்படும் போது ஆபாச தகவல்கள், படங்கள் என வந்து மிகவும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடுகிறது என்பது உண்மையே?...

ஆபாச தகவல் Google search ல் வராமல் Lock செய்வது எப்படி..?
முதலில் Google தளம் சென்று
User name, password கொடுத்து Login செய்யுங்கள்...
பிறகு
Setting click செய்யுங்கள்...
அல்லது
http://www.Google.com/preferences ஐ open செய்து...
Safe search filtering சென்று உங்களுக்கு தேவையான நிறுவனங்கள் Select செய்து கொண்டு முடிந்த பின்பு,
Back ல் மீண்டும் வந்து...
Safe search filtering கீழே உள்ள Lock safe search ஐ click செய்யுங்கள்...
Locking process நடைபெறும்...
பிறகு
Safe search locked என தோன்றும்...
சரியாக Lock ஆகிவிட்டதா? மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்..!!!
அவ்வளவு தான் ஆபாசம் சம்பந்தமாக எந்த தகவலும் உங்கள் System க்கு Google வழங்காது...
நீங்கள் Lock செய்த அடையாளமாக Google search page ல் வண்ண பந்துகள் தோன்றும்...
(Unlock செய்தும் கொள்ளலாம்..??)


Wednesday, 29 October 2014

ஒற்றைத் தலைவலி

ஒற்றைத் தலைவலியால் (Migraine headache) அவதிப்படுகிறவர்கள் மிக அதிகம். ரத்தநாளங்களை அழுத்தமாகத் துடிக்கச் செய்கிற, தலையின் ஒருபகுதியில் மட்டும் வலியை உண்டாக்குகிற, வாந்தி அல்லது வாந்தி எடுக்கும் உணர்வுடன் கூடிய, சூரிய ஒளியைக் கண்டால் அதிகரிக்கிற தலைவலியை ஒற்றைத் தலைவலி என்கிறார்கள்.
இந்தத் தலைவலி சில மணி நேரமோ, சில நாட்களுக்கோ காணப்படும். இருட்டில் போய் அமர

Friday, 26 September 2014

கிட்னி தானம் என்று சிந்தித்திருந்தால் தொழிலாளர்களின் கதி என்னவாகியிருக்கும்

நீங்க கின்னஸ் சாதனை பண்ண நாங்கதான் கிடைச்சோமா?

''தானாக கொடுப்பது தானம். அதையே கட்டாயப்படுத்தி, மிரட்டி வாங்கினால் அதற்கு பேரென்ன...?'' இப்படித்தான் கேட்கிறார்கள் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடந்த 14-ம் தேதி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கின்னஸ் ரெக்கார்டுமெகா ரத்த தான முகாமில் கலந்துகொண்டவர்கள்.

ரத்தம் கொடுக்க வரும்போது ஒன்றும், ரத்தம் கொடுத்த பின்பு இன்னொன்றுமாக பார்கோடு அச்சிடப்பட்ட ஸ்டிக்கரை கைகளில் ஒட்டிவிடுகிறார்கள். இதைக் கணினியில் காட்டினால் அது

Saturday, 20 September 2014

அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள்

அரசு போக்குவரத்துக்கழக பஸ்களில் கூடுதல் மைலேஜ் மற்றும் கூடுதல் கலெக்ஷன் கேட்டு அலுவலர்கள் கட்டாயப்படுத்தி வருகின்றனர். "மைலேஜ்'க்காக வேகமாக செல்ல முடியாதபடி இன்ஜினில் அட்ஜெஸ்ட் செய்து விடுகின்றனர். 
அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் அனைத்தும் கட்டை வண்டியை போல் ஊர்ந்து செல்லும் நிலை காணப்படுவதால், நாளுக்கு நாள் கலெக்ஷனும் குறைந்து வருகிறது. தினமும் அவமானம் ஏற்படுவதால் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் விரக்தி அடைந்துள்ளனர். சில ஆண்டுகளாக பஸ் கட்டணத்தை தமிழக அரசு ஏற்றாத காரணத்தாலும், பெட்ரோல், டீசல் விலை பலமுறை ஏறிவிட்டதாலும், நஷ்டம் ஏற்படாமல் இருக்க போக்குவரத்துக்கழகம் பல்வேறு கெடுபிடிகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. சமீப காலமாக போக்குவரத்து அலுவலர்களின் கெடுபிடி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒரு பஸ், ஒரு லிட்டர் டீசலுக்கு ஆறு கிலோ மீட்டர் மைலேஜ் தரவேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்றனர். புது பஸ் மற்றும் பழைய பஸ் என எந்த வித்தியாசமும் காட்டுவதில்லை. காயலான் கடைக்கு செல்லும் நிலையில் உள்ள பஸ் கூட குறிப்பிட்ட மைலேஜ் தரவேண்டும் என கட்டாயப்படுத்துவதால், பஸ் டிரைவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். "மைலேஜ்'க்காக கட்டை வண்டியை போல் அரசு பஸ்கள் ஊர்ந்து செல்வதால், பயணிகளின் எண்ணிக்கையும், கலெக்ஷனும் வேகமாக சரிந்து வருகிறது. 

இதே நிலை நீடித்தால், அரசு போக்குவரத்துக்கழகம் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என டிரைவர், கண்டக்டர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அரசு போக்குவரத்துக்கழக டிரைவர், கண்டக்டர்களில் சிலர் கூறியதாவது: புது பஸ் வாங்கும்போது, அந்த பஸ் கம்பெனியே, "ஒரு லிட்டர் டீசலுக்கு அதிக பட்சம் ஐந்து கிலோ மீட்டர் தான் மைலேஜ் தரும்' என, உத்தரவாதம் தருகின்றன. ஆனால், அரசு போக்குவரத்துக்கழக பஸ் களில் குறைந்த பட்ச மைலேஜ் அளவே ஆறு கிலோ மீட்டர். இந்த மைலேஜ் வர வேண்டும் எனில் பஸ்சின் வேகம் 40 கிலோ மீட்டரை தாண்டக்கூடாது. ஆனால், 40 கிலோ மீட்டரை தாண்டாத பஸ்களில் பயணிகள் ஏற முன்வருவதில்லை. அதற்கு பதில் அரை மணி நேரம் வரை காத்திருந்து கூட தனியார் பஸ்களில் ஏறி விடுகின்றனர். தனியார் பஸ்களும் மைலேஜ் குறித்து கவலைப்படாமல், சராசரியாக 80 கி.மீ., வரை வேகம் செல்கின்றனர்.
அதிக பயணிகள் ஏறுவதால் அவர்களுக்கு அதிகப்படியான லாபமும் கிடைக்கிறது. 
அரசு பஸ்சில் அதிக வேகம் போகலாம் என டிரைவர் முயற்சித்தாலும் முடியாதபடி இன்ஜினிலும் அட்ஜெஸ்ட்மென்ட் செய்து விடுகின்றனர். நாளுக்கு நாள் அரசு பஸ்களில் கலெக்ஷன் குறைந்து கொண்டே செல்கிறது. தற்போது, அனைத்து பஸ்களிலும் கலெக்ஷன் குறைவாக இருப்பது தெரிந்தும், ஒவ்வொரு பஸ் டிரைவர், கண்டக்டரிடமும், "உங்கள் பஸ்சில் மட்டும் தான் கலெக்ஷன் குறைந்துள்ளது' என, கடும் டோஸ் விழுகிறது. மைலேஜ் குறைந்தாலும் டோஸ், கலெக்ஷன் குறைந்தாலும் டோஸ் என தினந்தோறும் டிரைவர், கண்டக்டர்கள் திட்டு வாங்குவதிலேயே கழிகிறது. இந்த வெறுப்பை எல்லாம் சிலர் பயணிகளிடம் காட்டுவதால், பல இடங்களில் சண்டை சச்சரவு ஏற்படுகிறது. அது மட்டுமின்றி, பஸ்சில் பிரச்னை என்று பணிமனைக்கு சென்றால், "நீ காட்டும் கலெக்ஷனுக்கு இந்த கண்டிஷன் போதும்' என, கேவலமாக நடத்துகின்றனர்.
இந்த அவமான தாக்குதல்களால் டிரைவர், கண்டக்டர்களுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் கலெக்ஷன் காட்டும் பஸ் டிரைவர்களுக்காவது, மைலேஜ் விஷயத்தில் சிறிது விட்டுக்கொடுக்க வேண்டும். அதே போன்று வேகமாக செல்ல முடியாதவாறு செய்யப்பட்டுள்ள அட்ஜெஸ்ட் மென்டையும் உடனடியாக நீக்க வேண்டும். இல்லாவிட்டால், ஒரு லிட் டருக்கு 10 கி.மீ., மைலேஜ் தந்தாலும், பயணிகள் யாரும் ஏற முன் வரமாட்டர். பெரும் நஷ்டத்தையே போக்குவரத்துக் கழகம் சந்திக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். 
இது குறித்து போக்குவரத்துகழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: 

பஸ்கள், 40 கி.மீ., வேகத்தில் சென்றால், உண்மையில் டீசல் இழப்பே ஏற்படும். பொதுவாக 60 கி.மீ., வேகத்தில் செல்லவே பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பஸ் புறப்பட்டவுடன் சடாரென வேகம் எடுப்பதால், அதிக டீசலும், இன்ஜினில் அதிக புகையும் உருவாகும். இதை தவிர்க்க டிரைவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட டிரைவர்கள் ஆறு கிலோ மீட்டர் மைலேஜை விட அதிகமாகவே காட்டுகின்றனர். கலெக்ஷன் நிர்ணயிப் பதும், அலட்சியப்போக்கு வந்து விடக் கூடாது என்பதற்காகவே. மற்றபடி டிரைவர், கண்டக்டர்கள் டார்ச்சர் என கூறுவதில் உண்மையில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். எனினும், பொதுமக்கள், பஸ் ஊழியர் களின் புகார்கள் குவிவது குறையவில்லை. என்ன செய்யப்போகிறது அரசு போக்குவரத்துக் கழகம்?