Friday, 27 January 2012

சாலை விபத்துகள், சாலை விதிகள்

     விபத்தில் யார் பலியானாலும் நம் நெஞ்சம் பதைக்கும். தவறு யார் பக்கம் என்கிற ஆராய்ச்சியைவிட இறந்தவர் மீதான அனுதாபம் மேலோங்கும். அந்த இடத்தில் கூடுகிற கூட்டம், பெருகும் விபத்துகள் குறித்து பெரும் கவலை யை வெளிப்படுத்தும். அடுத்த நிமிடமே அவரவர் பாதையில் சாலை விதி களை மிதித்து எறிந்து விட்டு செல்லுவதை பார்க்கலாம்.


 இந்தச் சாலை விபத்துகளுக்கு காரணம் என்ன? தவிர்க்கவே முடியாதா? 

          சென்னை நகரில் கடந்த 10 ஆண்டு களில் சாலை விபத்துகளில் பலியானோர் எண்ணிக்கை
மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிக சாலை விபத்துச் சாவுகள் நடக்கும் நகரமாக தலைநகர் தில்லியே இருக்கிறது. சென்னை இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பது பெருமை அல்ல வேதனை. 2011ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை கிடைத்த விபரங்களின் படி 1455பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். 2010ஆம் ஆண்டைவிட 40 பேர் அதிக மாக உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு சென் னை நகரில் 811 பேரும், புறநகர்களில் 604 பேரும் ஆக மொத்தம் 1415 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கணக்கு சென்னை நகர் சார்ந்தது மட்டுமே. தமி ழகம் முழுவதுமான கணக்கு எடுத்துப் பார்த் தால் அதிர்ச்சி ஊட்டும் விபரங்கள் கிடைக்கும்.

      சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இல்லை என்று போக்குவரத்து காவல் துறை பொத்தாம் பொதுவாக குற்றம்சாட்டுகிறது.      
நமது கேள்வி, சாலை விழிப்புணர்வை உருவாக்க அரசு உருப்படியாக செய்தது என்ன? என்றாவது ஒருநாள் துண்டுப் பிரசுரம் விநியோகிப்பது மட்டும் போதுமா? சாலை விழிப்புணர்வு தொடர்ச்சியாக மாணவப்பருவம் தொட்டே ஊட்டப்பட வேண்டாமா? சாலை பாதுகாப்பு வாரம் என ஆண்டுக்கு ஒருமுறை சடங்கு அனுஷ்டித்தால் மட்டும் போதுமா? 

       சென்னை சாலையில் பெருகும் வாகனங் களுக்கு அரசின் தாராளமயக் கொள்கை காரணம் இல்லையா? பொதுப் போக்குவரத்தை மலிவானதாக விரைவானதாக அதிகப்படுத்து வதன் மூலமே வாகனங் களை கட்டுப்படுத்த முடியும். மறுபுறம் இருசக்கர வாகனம் வைத் திருப்பதே இளமை யின் அடையாளம் என ஒரு தவறான கருத்தியல் ஊடகங்கள் மூலம் தலை யில் திணிக்கப்பட்டதும் காரணம் இல்லையா?

        நெடுஞ்சாலைத் துறைக்கும் போக்குவரத்து துறைக்கும் காவல்துறைக்கும் ஒரு நெருக் கமான ஒத்துழைப்பும் புரிதலும் இருக்கு மானால் நெரிசலையும் விபத்தையும் இன்னும் கட்டுப் படுத்தலாமே! இப் போது அதில் பெரும் ஓட்டை உள்ளதை அரசு உணர்ந்துள்ளதா?

போக்குவரத்து வல்லுநர்கள் கூறுகி றார்கள், சாலையின் இரு மருங்கிலும் குறைந்த பட்சம் 1.5 மீட்டர் நடைபாதை இருக்க வேண்டும். இப் போது பெரும்பாலான சாலைகளில் இந்த விதி யை அரசே மீறி இருக்கிறது. இனியாவது திருத்தப்படுமா? அடுத்து ஆங்காங்கே சாலைகளை கடக்க உரிய ஏற்பாடு இல்லை. போதுமான போக்குவரத்துக் காவலர்கள் இல்லை. சுரங்கப் பாதைகளும் நடை மேம்பாலங்களும் பயன் படுத்துவதில் மிகப் பெரிய ஊனம் உள்ளது. 

பொதுமக்களிடமும் சாலை விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். சென்னை நகரில் புத்தாண்டு தினத்தன்று மட்டும் 5 கோடியே 25 லட் சம் ரூபாய்க்கு டாஸ்மாக் விற்பனை ஆகியுள் ளது. கடந்த ஆண்டை விட 30 விழுக்காடு அதிகம். பொதுவாக டாஸ்மாக் விற்பனை உயர்வு விகிதத்திற்கும் சாலை விபத்துகள் சாவு உயர்வு விகிதத்திற்கும் ஒரு நெருக்கம் இருக்கிறது. ஆகவே, குடித்துவிட்டு வண்டியை ஓட்டுவதை கட்டுப்படுத்த கறாரான வழிமுறை களை கண்டாக வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பற்றது.
                                            நன்றி  தீக்கதிர்

No comments:

Post a Comment