Monday 6 February 2012

அகவிலைப்படி உயர்வு 7%


அகவிலைப்படி
ஜனவரி 2012ல் 7% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே கிடைக்கும் அகவிலைபடி 58%. 7% உயர்வுடன் இப்பொழுது 65% ஜனவரி முதல் ஜுன் வரை கிடைக்கும் போக்குவரத்து தொழிலார்களுக்கு 22.01.2012 ஒப்பந்தத்திற்கு
முன்பு வரை மைய அரசு அறிவிக்கும் அகவிலைப்படி உயர்வு அரசு அறிவித்த அடுத்த மாதமே ஒரு மாத அரியர்சுடன் அகவிலைப்படி உயர்வு கொடுக்கப்பட்டது. 22.01.2012ல் ஒப்பந்தத்திற்கு பின் ஜனவரியில் 6% அகவிலைப்படி உயர்தப்பட்டது. இந்த உயர்வை வழங்காமல் தி.மு.க அரசு காலம் தாழ்த்தியது. தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் செய்த பின் 6% அகவிலைப்படி உயர்வை 4 மாத நிலுவை தொகையுடன் வழங்கியது. அதிலும் திருநெல்வேலி,சேலம்,கும்பகோணம் போன்ற கழகங்களில் தவணை முறையில் வழங்கினர்.
ஆட்சி மாறிய பின் (அ.இ.அ.தி.மு.க) 2011 ஜுலையில் உயர்ந்த 7% அகவிலைப்படியை அரசு மற்றும் அனைத்து பொதுதுறை ஊழியர்களுக்கும் வழங்க தமிழக அரசு அக்டோபர் மாத்தில் உத்தரவிட்டது. ஆனால் போக்குவரத்து தொழிலார்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்காமல் காலம் தாழ்த்தியது. மாநிலம் முழுவதும் கழக தலைமையகங்களில் போரட்டம் அறிவித்த பின் தமிழக முதல்வர் 4 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகை 9.15 கோடி என்றும் உடனே தொழிலார்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தார்.
        இந்த செய்தி அவரவர் விருப்பத்திற்கேற்ப பத்திரிக்கைகள் வெளியிட்டன. பஸ் ஊழியருக்கு சம்பள உயர்வு என செய்தி வெளியிட்டு ஏற்கனவே பேருந்து கட்டண உயர்வால் பாதிப்பிலிருந்த பொதுமக்களின் கோபத்தை தொழிலாளர் மேல் திருப்பிவிட்ட புண்ணியத்தை கட்டிகொண்டனர்.
முதல்வர் அறிவித்த பின்னும் 4 மாத நிலுவை தொகை வழங்கப்படாததை கண்டித்து தர்ணா நடத்திய பின் 01.10.2012ல் மாநகர்,விழுப்புரம்,கும்பகொணம் கழகங்களில் 4 மாத நிலுவை தொகை அணைத்தையும் வங்கியின் மூலம் வழங்கினர்.
ஆனாலும் திருநெல்வேலி,சேலம், கோவை,கும்பகோணம்,மதுரை,விரைவு கழகங்களில் இழுத்தடித்து. மீண்டும் போராடிய பின் சேலம்,மதுரையில்  வழங்கினர்.
ஆனாலும் திருநெல்வேலி, கோவை, கும்பகோணம், விரைவு கழகங்களில் தவணை முறையில் வழங்கியுள்ளனர்.
ஜனவரி 2012ல் 7% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது எப்பொழுது கிடைக்குமோ என ஏங்குகிறான் போக்குவரத்து தொழிலாளி.

No comments:

Post a Comment