Friday, 17 February 2012

அன்றும் இன்றும்



  நான் பள்ளியில் படிக்கும் பொழுது......

அன்று இயற்கையாக விளைந்த உணவும் காய்கறிகளும் பழங்களும் கிடைத்தன. இன்று தாய்பாலில்கூட விஷம்.


அன்று சுத்தமான காற்று கிடைத்து.  இன்று காற்று மண்டலமே அசுத்தம். ஓஸோனிலும் ஓட்டை.

அன்று சுத்தமான குடி நீர் கிடைத்து. இன்று தண்ணீருக்கும் காசு. குடிநீருக்கு பாலைவிடவும் விலை அதிகம்.

அன்று தியேட்டர்களில் கூட்டம் படம் பார்க்க. இன்று  மருத்துவ மனைகளில் கூட்டம் வைத்தியம் பார்க்க.

அன்று டிவியில் இரண்டே சேனல்கள். இன்று நிறைய சேனல்கள். பார்க்கத்தான் நேரமில்லை.

அன்று ஆசிரியர்களை குருவாக மதித்தனர் மாணவர்கள். இன்று ஆசிரியையை கொலை செய்கிறான் மாணவன்.

அன்று போன் இணைப்பு பெற ஆபீசுக்கு அலைந்தோம்.  இன்று தெருவில் விற்கப்படுகிறது மொபைலும் இணப்பும்.
 
அன்று அமெரிக்காவுடன் போட்டது அணு ஒப்பந்தம்.  இன்று போராடுகிறோம் வேண்டாம் அணுமின் நிலையம் (கூடங்குளம்) என்று.


No comments:

Post a Comment