Wednesday, 8 February 2012

Express கட்டணம்


Express கட்டணத்தால் கழக வருவாய் தனியாருக்கு போகும் அவலம்.
     
       சேலம் கோட்ட கழக பேருந்துகளில் குறைந்த தொலைவு இயங்கும் பேருந்துகளுக்கும் Express கட்டணம் வசூலிப்பதால் கழக வருவாய் தனியாருக்கு போகும் அவலநிலை உள்ளது. சேலம்-கள்ளக்குறிச்சி வழி தடத்தில் இயங்கும் சேலம் கோட்ட பேருந்துகளில் சில வழி தடங்களில் Express கட்டணமும் மற்ற தட வழிதடங்களில் சாதாரண கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இது தவிர சேலத்திலிருந்து விழுப்பரம், கடலூர், சிதம்பரம் ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளிலும் Express கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் சேலம் கோட்ட கழக பேருந்துகள் என்றாலே அதிக கட்டணம் (Express கட்டணம்) என்று கழக பேருந்துகளை புறகணித்து தனியார் பேருந்துகளுக்கு சென்றுவிடுகின்றனர்.
     
             ஆனால் இதே சேலத்திலிருந்து விழுப்பரம்,கடலூர் ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படும் விழுப்பரம் கோட்ட பேருந்துகள் சாதாரண கட்டணத்தில் இயங்குகின்றன. சேலம் கோட்ட நிர்வாகத்தின் இந்த தவறான கொள்கையினால் கழகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் தனியார் வருவாய்க்கு வழிவிடுவதுமாகும்.
     
           விழுப்புரம் கோட்டம் கள்ளக்குறிச்சி கிளையிலிருந்து இயக்கப்படும் கள்ளக்குறிச்சி-சேலம்-சென்னை மற்றும் கள்ளக்குறிச்சி to சென்னை to சேலம் வழித்தட பேருந்துகளில் கூட கள்ளக்குறிச்சி to சேலம் மற்றும் சேலம் to கள்ளக்குறிச்சி வழியில் சாதரண கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. 
          
              சேலம் கோட்ட கழக பேருந்துகள் சேலம் to ஆத்தூருக்கும், ஆத்தூர் to கள்ளக்குறிச்சிக்கும் Express கட்டணத்தில் இயக்குவது யாருக்காக? யாரை திருப்த்திபடுத்த?

No comments:

Post a Comment